‘வோர்ன் – முரளி’ கிண்ணம் – ஒரு கண்ணோட்டம்

199
  • Warne–Muralidaran Trophy 2016

உலகில் டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் அதிக விக்கட்டுகளைக் கைப்பற்றிய முதல் இருவர் மற்றும் டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் தோன்றிய மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் இருவராகக் கருதப்படும்

இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் ஆகியோரின் பெயரைத் தாங்கிய வோர்ன் – முரளி கிண்ணம், இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட போட்டித் தொடராக நடைபெறவுள்ள இந்தத் தொடரின் 1ஆவது போட்டி கண்டி பல்லேகலே மைதானத்தில் அரங்கேறவுள்ளது.

வோர்ன் – முரளி கிண்ண காலநேர அட்டவணை

இலங்கை எதிர் ஆஸி : 1ஆவது டெஸ்ட் -ஜூலை 26-30 (பல்லேகளே)
இலங்கை எதிர் ஆஸி : 2ஆவது டெஸ்ட் – ஆகஸ்ட் 4-8 (காலி)
இலங்கை எதிர் ஆஸி : 3ஆவது டெஸ்ட் – ஆகஸ்ட் 13-17 (எஸ்.எஸ்.சி)

இந்தத் தொடரின் வரலாற்றை உற்றுநோக்கினால் இதுவரையில் 2007/08, 2011 மற்றும் 2012/13 ஆண்டுகளில் மொத்தமாக 3 தொடர்கள் இடம்பெற்றுள்ளது. அத்தோடு அவை மூன்றிலுமே அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளது.

இலங்கையினதும் அவுஸ்திரேலியாவினதும் நட்சத்திர வீரர்களின் பெயரை இக்கிண்ணம் தாங்கியிருந்தாலும், இலங்கை சார்பில் பெயரைக் கொண்ட முரளிதரன், அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஆலோசகராகச் செயற்படுகின்றமை, இக்கிண்ணத்தில் காணப்படும் 2 பெயர்களுமே, அவுஸ்திரேலியாவின் பக்கமாக உள்ள நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் முதல்நிலை டெஸ்ட் அணியாக அவுஸ்திரேலியா உள்ள நிலையில், இலங்கை அணி, 7ஆம் இடத்திலுள்ளது. பாகிஸ்தானுக்கெதிரான தொடரை இங்கிலாந்து வென்று, இந்தத் தொடரை அவுஸ்திரேலியா அணி தோற்றால், முதலிடத்தை அவ்வணி இழக்கும் என்ற நிலையில் தான் அவ்வணி களம் இறங்குகிறது.

வோர்ன் – முரளி கிண்ணம் ஆரம்பிக்கப்பட முன் 1983ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் 18 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இந்த 18 போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இலங்கை அணி ஒரே ஒரு போட்டியில் 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் வெற்றியை ருசித்துள்ளது. மிகுதி 6 போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்துள்ளது.

1982/83 இலங்கை மண்ணில் அவுஸ்ரேலிய (1 டெஸ்ட் போட்டி)
1987/88 அவுஸ்ரேலிய மண்ணில் இலங்கை (1 டெஸ்ட் போட்டி)
1989/90 அவுஸ்ரேலிய மண்ணில் இலங்கை ( 2 டெஸ்ட் போட்டிகள்)
1992 இலங்கை மண்ணில் அவுஸ்ரேலிய ( 3 டெஸ்ட் போட்டிகள்)
1995/96 அவுஸ்ரேலிய மண்ணில் இலங்கை ( 3 டெஸ்ட் போட்டிகள்)
1999 இலங்கை மண்ணில் அவுஸ்ரேலிய ( 3 டெஸ்ட் போட்டிகள்)
2003/04 இலங்கை மண்ணில் அவுஸ்ரேலிய ( 3 டெஸ்ட் போட்டிகள்)
2004 அவுஸ்ரேலிய மண்ணில் இலங்கை ( 2 டெஸ்ட் போட்டிகள்)

வோர்ன் – முரளி கிண்ணம் – 2007/08

வோர்ன் – முரளி கிண்ணம் முதன் முதலாக 2007/08 ஆண்டுகாலப் பகுதியில் அவுஸ்திரேலியாவில் 2 போட்டிகளைக் கொண்ட தொடராக நடைபெற்றது. இந்த இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற ரீதியில் வென்றது.

1ஆவது போட்டி : பிரிஸ்பெர்ன் மைதானத்தில் (நவம்பர் 8-12)

அவுஸ்திரேலியா – 551/4d
மைக்கல் க்ளார்க் 145*, மைக் ஹசி 133, பில் ஜெக்ஸ் 100
முத்தையா முரளிதரன் 170/2

இலங்கை – 211/10
மார்வன் அதபத்து 51, சாமர சில்வா 40, பிரசன்ன ஜயவர்தன 37
பிரெட் லீ 26/4, ஸ்டுவர்ட் க்ளார்க் 46/2

இலங்கை – 300/10 (Follw on முறையில்)
மைக்கல் வென்டொட் 82, மஹெல ஜயவர்தன 49, சாமர சில்வா 43
பிரெட் லீ 86/4, மிச்செல் ஜோன்சன் 47/2

அவுஸ்ரேலிய அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களால் வெற்றி


2ஆவது போட்டி : ஹோபார்ட் மைதானத்தில் (நவம்பர் 16-20)

அவுஸ்திரேலியா – 542/5
பில் ஜெக்ஸ் 150, மைக் ஹசி 132, மைக்கல் க்ளார்க் 71
டில்ஹார பெர்னாண்டோ 134/2, முத்தையா முரளிதரன் 140/1

இலங்கை – 246/10
மஹெல ஜயவர்தன 104, குமார் சங்கக்கார 57, மார்வன் அதபத்து 25
பிரெட் லீ 82/4, ஸ்டுவர்ட் க்ளார்க் 32/2

அவுஸ்திரேலியா – 210/2d
பில் ஜெக்ஸ் 68, ரிக்கி பொண்டிங் 53*
லசித் மலிங்க 61/1, முத்தையா முரளிதரன் 90/1

இலங்கை – 410/10 (வெற்றி இலக்கு : 507)
குமார் சங்கக்கார 192, மார்வன் அதபத்து 80, சனத் ஜயசூரிய 45
பிரெட் லீ 87/4, , மிச்செல் ஜோன்சன் 101/3

அவுஸ்திரேலிய அணி 96 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற அடிப்படையில் வென்றது.

Warne–Muralidaran Trophy 2007


வோர்ன் – முரளி கிண்ணம் – 2011

1ஆவது வோர்ன் – முரளி கிண்ணம் இடம்பெற்று 4 வருடங்களின் பின் 2ஆவது வோர்ன் – முரளி கிண்ணம் இலங்கையில் 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடராக இடம்பெற்றது. இத்தொடரை அவுஸ்திரேலிய அணி 1-0 என்ற ரீதியில் வென்றது.

1ஆவது போட்டி : காலி மைதானத்தில் (ஆகஸ்ட் 31,செப் 1,2,3,4)

அவுஸ்திரேலியா – 273/10
மைக் ஹசி 95, ரிக்கி பொன்டிங் 44, ப்ரெட் ஹெட்டிங் 24
ரங்கன ஹேரத் 54/3, சுரங்க லக்மால் 55/3

இலங்கை – 105/10
தரங்க பரணவிதான 29, திலான் சமரவீர 26
நேதன் லியோன் 34/5, ஷேன் வொட்சன் 11/3

அவுஸ்திரேலியா – 210/10
மைக்கல் க்ளார்க் 60, பில் ஹியூஸ் 28, உஸ்மான் கவாஜா 26
ரங்கன ஹேரத் 79/5, வெலகெதர 13/2

இலங்கை – 253/10 ( வெற்றி இலக்கு : 379)
மஹெல ஜயவர்தன 105, எஞ்சலோ மெதிவ்ஸ் 95
ரெயன் ஹெரிஸ் 62/5, ஷேன் வொட்சன் 19/2

அவுஸ்திரேலியா அணி 125 ஓட்டங்களால் வெற்றி


2ஆவது போட்டி : பல்லேகளே மைதானத்தில் (செப்டம்பர் 8-12)

இலங்கை – 174/10
எஞ்சலோ மெதிவ்ஸ் 58, குமார் சங்கக்கார 48
ரெயன் ஹெரிஸ் 38/3, ட்ரெண்ட் கொப்லேண்ட் 24/2

அவுஸ்திரேலியா – 411/7d
மைக் ஹசி 142, ஷோன் மார்ஷ் 141, பில் ஹியூஸ் 36, ஷேன் வொட்சன் 36
சுராஜ் ரந்திவ் 103/3, சுரங்க லக்மால் 102/2

இலங்கை – 317/6 (5ஆம் நாள் ஆட்ட நேர முடிவில்)
குமார் சங்கக்கார 69, தரங்க பரணவிதான 55, மஹெல ஜயவர்தன 51
ரெயன் ஹெரிஸ் 54/3

போட்டி சமநிலையில் முடிவு


3ஆவது போட்டி : எஸ்.எஸ்.சி மைதானத்தில் (செப்டம்பர் 16-20)

அவுஸ்திரேலியா- 316/10
மைக் ஹசி 118, ஷோன் மார்ஷ் 81, ரிக்கி பொன்டிங் 48
ஷாமிந்த எரங்க 65/4, வெலகெதர 75/3

இலங்கை – 473/10
எஞ்சலோ மெதிவ்ஸ் 105* திலகரத்ன டில்ஷான் 83, குமார் சங்கக்கார 79, மஹெல ஜயவர்தன 51
பீட்டர் ஸிட்ல் 91/4, ட்ரெண்ட் கொப்லேண்ட் 93/2

அவுஸ்திரேலியா – 488/10
பில் ஹியூஸ் 126, மைக்கல் க்ளார்க் 112, மைக் ஹசி 93
ரங்கன ஹேரத் 157/7

இலங்கை – 7/0 ( வெற்றி இலக்கு : 332)

போட்டி சமநிலையில் முடிவு

3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இத்தொடரை அவுஸ்திரேலிய அணி 1-0 என்ற ரீதியில் வென்றது.Warne–Muralidaran Trophy 2011


வோர்ன் – முரளி கிண்ணம் – 2012/13

இந்த இரண்டு அணிகளும் இறுதியாக வோர்ன் – முரளி கிண்ணதில் 2012/13 ஆண்டு காலப்பகுதியில் அவுஸ்திரேலிய மண்ணில் சந்தித்தன. 3 போட்டிகளைக் கொண்ட தொடராக இடம்பெற்ற இத்தொடரை அவுஸ்திரேலிய அணி 3-0 என்ற ரீதியில் வென்று தொடரை “வயிட் வோஷ்” செய்தது.

1ஆவது போட்டி : ஹோபார்ட் மைதானத்தில் (டிசம்பர் 14-18)

அவுஸ்திரேலியா – 450/5d
மைக் ஹசி 115*, பில் ஹியூஸ் 86, மைக்கல் க்ளார்க் 74
வெலகெதர 130/4

இலங்கை – 336/10
திலகரத்ன டில்ஷான் 147, எஞ்சலோ மெதிவ்ஸ் 75, பிரசன்ன ஜயவர்தன 40
பீட்டர் ஸிட்ல் 54/5, நேதன் லியோன் 76/2

அவுஸ்திரேலியா 278/10
டேவிட் வோர்னர் 68, எட் கொவ்ன் 56, மைக்கல் க்ளார்க் 57
ரங்கன ஹேரத் 95/5, வெலகெதர 89/3

இலங்கை 255/10 ( வெற்றி இலக்கு 393)
குமார் சங்கக்கார 63, திலான் சமரவீர 49, திமுத் கருணாரத்ன 30
மிச்சல் ஸ்டார்க் 63/5, பீட்டர் ஸிட்ல் 50/4

அவுஸ்திரேலிய அணி 137 ஓட்டங்களில் வெற்றி


2ஆவது போட்டி : மெல்போர்ன் மைதானத்தில் (டிசம்பர் 26-28)

இலங்கை – 156/10
குமார் சங்கக்கார 58, பிரசன்ன ஜயவர்தன 24, எஞ்சலோ மெதிவ்ஸ் 15
மிச்சல் ஜோன்சன் 63/4, நேதன் லியோன் 23/2, பீட்டர் ஸிட்ல் 30/2

அவுஸ்திரேலியா 460/10
மைக்கல் கிளார்க் 106, மிச்சல் ஜோன்சன் 92*, ஷேன் வொட்சன் 83
ஷாமிந்த எரங்க 109/3, தம்மிக்க பிரசாத் 106/3

இலங்கை – 103/10
எஞ்சலோ மெதிவ்ஸ் 35, குமார் சங்கக்கார 27, தம்மிக்க பிரசாத் 17
மிச்சல் ஜோன்சன் 16/2, ஜெக்சன் பேர்ட் 29/2

அவுஸ்திரேலிய அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 201 ஓட்டங்களால் வெற்றி


3ஆவது போட்டி : சிட்னி மைதானத்தில் (ஜனவரி 3-6)

இலங்கை – 294/10
லஹிரு திரிமான்ன 91, மஹெல ஜயவர்தன 72, திலகரத்ன டில்ஷான் 34
ஜெக்சன் பேர்ட் 41/4, மிச்சல் ஸ்டார்க் 71/3

அவுஸ்திரேலியா – 432/10
மெத்திவ் வெட் 102*, பில் ஹியூஸ் 87, டேவிட் வோர்னர் 85
ரங்கன ஹேரத் 95/4, நுவான் பிரதீப் 114/2

இலங்கை 278/10
திமுத் கருணாரத்ன 85, மஹெல ஜயவர்தன 60, தினேஷ் சந்திமால் 62*
ஜெக்சன் பேர்ட் 76/3, மிச்சல் ஜோன்சன் 34/3

அவுஸ்திரேலியா – 141/5 (வெற்றி இலக்கு : 141)
எட் கொவ்ன் 36, பில் ஹியூஸ் 34, மைக்கல் கிளார்க் 29
ரங்கன ஹேரத் 47/3

அவுஸ்திரேலிய 5 விக்கட்டுகளால் வெற்றி பெற்றதோடு 3 போட்டிகளைக் கொண்ட தொடரை 3-0 என்ற ரீதியில் வென்று தொடரை “வயிட் வோஷ்” செய்தது.Warne–Muralidaran Trophy 2012

இதுவரை நடைபெற்றுள்ள 3 வோர்ன் – முரளி கிண்ணப் போட்டித்தொடரையும் அவுஸ்திரேலியா அணி வென்றுள்ளது. இதனால் இம்முறை நடைபெறும் 4ஆவது வோர்ன் – முரளி கிண்ணத்தை முழு முயற்சி செய்து வெற்றி கொள்ளும் முனைப்புடன் இலங்கை அணி களமிறங்கவுள்ளது.

வோர்ன் – முரளி கிண்ணத்தில்
அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் – மைக் ஹசி
அதிக விக்கட்டுகளை வீழ்த்திய வீரர் – ரங்கன ஹேரத்