ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் மோதல் ஹம்பாந்தோட்டையில்

543
etty Images

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஹம்பாந்தோட்டையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இரண்டு அணிகளும் ICCஇன் ஒருநாள் சம்பியன்ஷிப்பிற்காக விளையாடவிருந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், செப்டம்பர் மாத ஆரம்பம் தொடக்கம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்த திட்டமிடப்பட்ட போதும் குறித்த காலப்பகுதியில் அங்கே இந்த ஆண்டுக்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரின் எஞ்சிய போட்டிகள் நடைபெறவுள்ளன. 

ஆறுதல் வெற்றியுடன் ஒருநாள் தொடரினை நிறைவு செய்த இலங்கை

எனவே, குறித்த காலப்பகுதியில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரினை நடாத்துவதற்கான மைதானம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இல்லாததன் காரணமாகவே இரு அணிகளும் பங்குபெறும் ஒருநாள் தொடரை இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

அதன்படி ஹம்பாந்தோட்டையில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் பங்குபெறும் ஒருநாள் தொடர் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 5ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

 மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…