றேஞ்சர்ஸை வீழ்த்தி “வடக்கின் கில்லாடி யார்?” காலிறுதிக்குள் நுழைந்தது உதயதாரகை

159

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு Thepapare.com இன் ஊடக அனுசரணையில் நடாத்தப்படும் “ வடக்கின் கில்லாடி யார்?” உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இரண்டாவது சுற்றின் இறுதிப் போட்டி   இன்றைய தினம் அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.    

கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டுக் கழகம்

FA கிண்ண சுற்றுத் தொடரில் இறுதி 32 அணிகளுள் முன்னேறியிருக்கும் றேஞ்சர்ஸ் அணியினை எதிர்த்து கிளிநொச்சியின் முன்னணி அணியான உதயதாரகை அணி மோதியது.

“வடக்கின் கில்லாடி யார்?” தொடரின் காலிறுதியில் பாடும்மீன், கலைமதி, இருதயராசா அணிகள்

போட்டியின் 6ஆவது நிமிடத்தில் கீர்த்திகனினது கோல் மூலம் போட்டியின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது றேஞ்சர்ஸ் அணி.

மேலதிக கோல்களேதுமின்றி றேஞ்சர்ஸ் அணி முன்னிலையுடன் நிறைவிற்கு வந்தது முதலாவது பாதியாட்டம்.

இரண்டாவது பாதியாட்டத்தின் 5ஆவது நிமிடத்தில் ஜெனார்தன் பெற்ற கோலினுதவியுடன் கோல் கணக்கினை சமன் செய்தது உதயதாரகை விளையாட்டுக் கழகம். அதேவேகத்தில் தினேஷ் மேலும் ஒரு கோலினைப் பதிவு செய்து உதயதாரகை அணியினை முன்னிலைப்படுத்தினார்.

போட்டியின் 50ஆவது நிமிடத்தில் ஜெனார்த்தன் மேலும் ஒரு கோலினைப் போட்டார். இரண்டாவது பாதியில் சிறப்பாட்டத்தினை வெளிப்படுத்திய உதயதாரகை அணி ஆட்டத்தை வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

முழு நேரம்:  றேஞ்சர்ஸ் வி. 01 – 03  உதயதாரகை வி.

  • ஆட்டநாயகன்அன்ரனிராஜ் ( உதயதாரகை வி.கோல் பெற்றவர்கள்
  • றேஞ்சர்ஸ் வி.க – கீர்த்திகன் 6′
  • உதயதாரகை வி.க – ஜெனார்த்தன் 35’ & 50′, தினேஷ் 37′

லக்கி ஸ்ராரை வீழ்த்தி FA கிண்ண அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது சென் நீக்கிலஸ்

காலிறுதிக்கு தகுதிபெற்றது கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம்

இம்மாதம் 22ஆம் திகதி கொலின்ஸ், உருத்திரபுரம் அணிகளுக்கிடையிலான போட்டி 01-01 என சமநிலையிலிருக்கையில், நடுவரது தீர்ப்பினை ஆட்சேபித்து போட்டி நிறைவடைவதற்கு சில நிமிடங்களிருக்கையில் கொலின்ஸ் அணி மைதானத்தினை விட்டு வெளியேறியிருந்தது. இதனால், போட்டி கைவிடப்பட்டிருந்தது.

குறித்த போட்டி தொடர்பாக யாழ் லீக்கினது போட்டிக் குழு, நடுவர்கள் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்களது கருத்திற்கமைய யாழ் லீக் போட்டிக் குழு, உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

Photos: Vadakkin Killadi Yaar??? Football Tournament | Day 07 Matches

இதன்படி, வடக்கின் கில்லாடி யார்?” தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டிகள் யாவும் நிறைவடைந்துள்ள நிலையில்? இம்மாதம் 27ஆம் திகதிமுதல் காலிறுதிச்சுற்று ஆட்டங்கள் அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் மின்னொளியில் இடம்பெறவுள்ளது.

காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அணிகள்.

இளவாலை யங்ஹென்றீசியன்ஸ் (வலிகாமம்), குருநகர் பாடும்மீன் (யாழ்), கிளிநொச்சி உருத்திரபுரம் (கிளிநொச்சி), நவின்டில் கலைமதி (வடமராட்சி), கிளிநொச்சி உதயதாரகை (கிளிநொச்சி), அச்செளு வளர்மதி (யாழ்), ஊரெழு றோயல்(யாழ்), மெலிஞ்சிமுனை இருதயராசா(தீவகம்)

“வடக்கின் கில்லாடி யார்?” தொடரின் இறுதிச் சுற்றுப் போட்டிகளின் முடிவுகள், புள்ளி விபரங்கள் மற்றும் புகைப்படங்களை பெற்றுக்கொள்ள Thepapare.com உடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க