கோபத்தில் கதவை உடைத்து சர்ச்சையில் சிக்கிய நைஜில் லோங்

344
IPL official page

விராட் கோஹ்லியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து பெங்களூர் மைதானத்தில் உள்ள அறை கதவை உடைத்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நடுவர் நைஜில் லோங்க்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் போட்டியில் கடந்த 4ஆம் திகதி பெங்களூர் சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ்சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

சென்னையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த மும்பை

ஐ.பி.எல். தொடரில் நேற்று (07) நடைபெற்ற ………..

இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் வீசிய பந்தைநோபோல்என்று ஆடுகள நடுவரான நைஜில் லோங் அறிவித்தார். ஆனால் மூன்றாவது நடுவரிடம் தொலைக்காட்சியில் உமேஷ் யாதவ் எல்லைக் கோட்டின் மீது கால் வைத்து சரியாக பந்து வீசியது தெரிந்தது. இதனால் அதிருப்தி அடைந்த பெங்களூர் அணித் தலைவர் விராட் கோஹ்லி, உமேஷ் யாதவ் ஆகியோர் நடுவருடன் வாக்குவாதம் செய்தனர். அவர்களை நடுவர் நைஜில் லோங் சமாதானப்படுத்தினார். இருப்பினும், இருவரும் தொடர்ந்து வாக்குவாதம் செய்தாலும், நடுவர் லோங் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் அரங்கு திரும்பிய நடுவர் நைஜில் லோங் மைதானத்தில் உள்ள நடுவர்கள் அறையின் கதவை ஆத்திரத்தில் ஓங்கி உதைத்தார். இதனால் கதவு சேதம் அடைந்தது.  

இதயைடுத்து போட்டி நடுவர் நாராயணன் குட்டியுடன் ஆலோசனை நடத்திய கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், பிசிசிஐ நிர்வாகிகள் குழுவுக்கு இந்தச் சம்பவத்தைப் புகார் செய்தது.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் நடுவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. பின்னர் தனது தவறை ஒப்புக்கொண்ட அவர், சேதமடைந்த கதவை சரிசெய்ய 5 ஆயிரம் ரூபா பணத்தை கொடுத்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியுடன் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை

இலங்கை அணியுடன் மூன்று டி20 சர்வதேச ……..

இதனிடையே, எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள .பி.எல். இறுதிப் போட்டியின் நடுவராக நியமிக்கப்பட்டுள்ள நைஜில் லோங் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் சுதாகர் ராவ் கருத்து தெரிவிக்கையில், ‘நடந்த சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் சபை நிர்வாக குழுவிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுவர் நைஜில் லோங் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம். வீரர்கள் தவறாக நடந்து கொண்டால் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதம் விதிக்கப்படுகிறது. நடுவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாதுஎன்றார்.

.சி.சியின் பிரதான நடுவர் குழுவில் (எலைட்) அங்கம் வகிக்கும் நைஜில் லோங், இதுவரை 56 டெஸ்ட், 123 ஒருநாள் மற்றும் 32 சர்வதேச டி20 போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். அத்துன், நடப்பு .பி.எல் தொடரின் இறுதிப் போட்டியிலும் அவர் நடுவராக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<