பெனால்டியில் வென்ற ஸ்பெயின், பெல்ஜியத்தை வீழ்த்திய இத்தாலி அரையிறுதியில்

4352
Sweden vs Spain & Belgium vs Italy

யூரோ 2020 கால்பந்து தொடரில் சுவிட்சர்லாந்தை பெனால்டியில் வீழ்த்திய ஸ்பெயின் அணியும், பெல்ஜியத்தை வீழ்த்திய இத்தாலியும் தொடரின் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. 

சுவிட்சர்லாந்து எதிர் ஸ்பெயின் 

இந்தப் போட்டி ரஷ்யாவின் Saint Petersburg அரங்கில் வெள்ளிக்கிழமை (02) இரவு இடம்பெற்றது. இறுதி 16 அணிகள் சுற்றில் ஸ்பெயின் வீரர்கள் குரோசிய அணியை 5-3 என வென்றும், சுவிட்சர்லாந்து வீரர்கள் உலக சம்பியன் பிரான்ஸ் அணியை பெனால்டியில் 5-4 என வென்றும் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். 

>> விறுவிறுப்பான போட்டியின் பின் காலிறுதிக்குச் சென்ற ஸ்பெயின், சுவிட்சர்லாந்து

இந்நிலையில் இந்தப் போட்டி ஆரம்பித்து எட்டாவது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு கிடைத்த முதலாவது கோணர் உதையின்போது உள்ளனுப்பிய பந்தை Jordi Alba கோல்  நோக்கி உதைந்தார். இதன்போது, சுவிட்சர்லாந்து வீரர் Zakaria வின் காலில் பட்டு பந்து கோலுக்குள் செல்ல, ஸ்பெயின் ஓன் கோல் மூலமாக போட்டியில் முன்னிலை பெற்றது. 

அதன் பின்னர் போட்டியின் 68ஆவது நிமிடம் வரையில் கோல் பெறப்படவில்லை. 68ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் பின்கள வீரர்கள் இருவரிடையே பந்தைத் தடுப்பதில் ஏற்பட்ட தவறின்போது பந்தைப் பெற்ற சுவீடனின் Freuler அதனை அணித் தலைவர் Shaqiriக்கு வழங்கினார். இதன்மூலம் Shaqiri சுவிட்சர்லாந்து அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார். 

எனினும், 77ஆவது நிமிடத்தில் Freuler எதிரணி வீரரை முறையற்ற விதத்தில் வீழ்த்தியமைக்காக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

பின்னர் 10 வீரர்களுடன் விளையாடிய சுவீடனுக்கு எதிராக ஸ்பெயின் பல கோல் முயற்சிகளை எடுத்தாலும், இரண்டாம் பாதியில்  Shaqiriயின் கோலுக்கு மேலதிகமாக எந்த கோலும் பெறப்படாமல் முழு நேரம் தலா ஒரு கோலுடன் நிறைவடைந்தது. 

அதன் பின்னர், மேலதிகமாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களில் ஸ்பெயின் தரப்பினர் 10 வீரர்களுடன் விளையாடிய சுவிட்சர்லாந்து அணியின் கோல் எல்லையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி, அடுத்தடுத்து கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும், அவை அனைத்தையும் Sommer சிறந்த முறையில் தடுத்தார். 

Watch – யூரோ வெற்றியாளர்கள் என கருதப்பட்ட அணிகள் வெளியே !| FOOTBALL ULAGAM 

எனவே, மேலதிக நேரத்தின் முடிவிலும் கோல்களின் எண்ணிக்கை 1 – 1 என இருந்ததால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி உதை வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது, இத்தாலி வீரர்கள் 3 கோல்களைப் பெற சுவிட்சர்லாந்து வீரர்களால் ஒரு கோலினை மட்டுமே பெற முடிந்தது. எனவே, பெனால்டியில் 3-1 என வெற்றி பெற்ற ஸ்பெயின் முதல் அணியாக யூரோ 2020 தொடரின் அரையிறுதிக்குத் தெரிவானது. 

முழு நேரம்: சுவிட்சர்லாந்து 1 – 1 ஸ்பெயின் 

பெனால்டி முடிவு: சுவிட்சர்லாந்து 1 – 3 ஸ்பெயின் 

கோல் பெற்றவர்கள் 

  • சுவிட்சர்லாந்து – Shaqiri 68′ 
  • ஸ்பெயின் – Zakaria 8′ (OG) 

பெல்ஜியம் எதிர் இத்தாலி 

காலிறுதிக்கு முன்னைய சுற்றில், யூரோ நடப்புச் சம்பியன் போர்த்துக்கல் அணியை 1-0 என வீழ்த்திய பெல்ஜியம் அணி, முன்னைய சுற்றில் ஆஸ்திரியாவை 2 – 1 என வெற்றி கொண்ட இத்தாலியை ஜேர்மனியின் முனிச் அரங்கில் எதிர்கொண்டது. 

போட்டியின் 14அவது நிமிடத்தில் எதிரணியின் மத்திய களத்தில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பின்போது உள்வந்த பந்தின்மூலம் இத்தாலி வீரர்கள் முதல் கோலைப் பெற்றனர். எனினும், பரிசோதனையின் பின்னர் அது ஓப் சைட் என கண்டறியப்பட்டு, கோல் நிராகரிக்கப்பட்டது. 

ஆட்டம் 30 நிமிடங்களைக் கடந்த நிலையில் பெல்ஜிய பின்கள வீரரும் இந்த போட்டிக்கு தலைவராகவும் செயற்பட்ட Vertonghen மேற்கொண்ட பிழையான பந்துப் பரிமாற்றத்தின்போது பெற்ற வாய்பின்மூலம் Barella இத்தாலி அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.  

மேலும் 13 நிமிடங்களில் தமது எல்லையில் இருந்து பந்தை வேகமாக எடுத்துச்  சென்ற Insigne எதிரணியின் கோல் எல்லைக்கு சற்று வெளியில் இருந்து கோலின் வலது புறத்தால் பந்தை செலுத்தி இத்தாலிக்கான அடுத்த கோலைப் பெற்றார். 

முதல் பாதியின் உபாதையீடு நேரத்தில் இத்தாலி பின்கள வீரர் Lorenzo தமது கோல் எல்லைக்குள் வைத்து எதிரணி வீரரை முறையற்ற விதத்தில் வீழ்த்தியமையினால் பெல்ஜியம் அணிக்கு கிடைத்த பெனால்டியை Lukaku கோலாக்கினார். 

முதல் பாதியில் பெல்ஜியம் வீரர்கள் கோலுக்கு எடுத்த இரண்டு முயற்சிகளை இத்தாலி கோல் காப்பாளர் Donnarumma சிறப்பாகப் பாய்ந்து தடுத்தார். எனவே, முதல் பாதி நிறைவில் இத்தாலி 2-1 என முன்னிலை பெற்றது. 

இரண்டாம் பாதியில் முதல் பாதியை விட அதிகமான வாய்ப்புக்களை பெல்ஜியம் அணி உருவாக்கியது. எனினும், அவை எதுவும் கோலாக நிறைவு பெறாத நிலையில், போட்டி நிறைவில் பிபா தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணி 2-1 என பிபா தரவரிசையில் 10ஆவது இடத்தில் இருக்கும் இத்தாலி அணியிடம் தோல்வியடைந்தது. 

எனவே, இம்முறை யூரோ தொடரில் எந்தவொரு தோல்வியையும் சந்திக்காத பெல்ஜியம் இந்த தோல்வியினால் தொடர்ச்சியாக இரண்டாவது முறை யூரோ கிண்ணத் தொடரில் காலிறுதிச் சுற்றுடன் வெளியேறியுள்ளது. 

இம்முறை இதுவரை எந்த தோல்வியையும் சந்திக்காது அரையிறுதிக்கு தெரிவாகியுள்ள இத்தாலி அணி, அரையிறுதியில் ஸ்பெயின் அணியை சந்திக்கவுள்ளது. 

முழு நேரம்: பெல்ஜியம் 1 – 2 இத்தாலி

கோல் பெற்றவர்கள்   

  • பெல்ஜியம் –  Lukaku 45’+2 (P)
  • இத்தாலி – Barella 31′, Insigne 44′

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<