உலகில் இடம்பெறும் முக்கிய கால்பந்து சுற்றுத் தொடர்களில் ஒன்றான சம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் சுற்றான குழு மட்டப் போட்டிகளின் நிறைவில் 16 அணிகள் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன.
மொத்தமாக 32 அணிகள் பங்கு கொள்ளும் இத்தொடர் கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. அதன் பின்னர் 6 கட்டங்களாக இடம்பெற்ற முதல் சுற்றுப் போட்டிகள் டிசம்பர் 8ஆம் திகதியுடன் நிறைவடைந்தன.
முதல் சுற்றில் 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் தலா 4 அணிகள் உள்வாங்கப்பட்டிருந்தன. ஒரு அணி தமது குழுவில் உள்ள ஏனைய அணிகளுடன் இரண்டு முறை மோதின. அதன்படி, முதல் சுற்று நிறைவில் குழு மட்டத்தில் முதல் இரு இடங்களையும் பெற்ற அணிகள் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன.
குழு A
குழு Aஇல் இடம்பெற்ற போட்டிகளின் நிறைவில் 14 புள்ளிகளைப் பெற்று குழு மட்டத்தில் முதல் இடத்தைப் பெற்ற ஆர்சனல் மற்றும் 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தினைப் பெற்ற பரிஸ் SG ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன.
| அணி | போட்டி | வெற்றி | சமநிலை | தோல்வி | புள்ளிகள் |
| ஆர்சனல் | 6 | 4 | 2 | 0 | 14 |
| பரிஸ் SG | 6 | 3 | 3 | 0 | 12 |
| லூடோகரஸ் ரஸ்க்ராட் | 6 | 0 | 3 | 3 | 3 |
| FC பாசெல் | 6 | 0 | 2 | 4 | 2 |
குழு B
இக்குழுவின் போட்டிகளின் முடிவில், நபோலி அணி 11 புள்ளிகளுடனும் பென்பிகா அணி 8 புள்ளிகளுடனும் முறையே முதல் இரண்டு இடங்களையும் பிடித்து அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன.
| அணி | போட்டி | வெற்றி | சமநிலை | தோல்வி | புள்ளிகள் |
| நபோலி | 6 | 3 | 2 | 1 | 11 |
| பென்பிகா | 6 | 2 | 2 | 2 | 8 |
| பெசிக்டஸ் | 6 | 1 | 4 | 1 | 7 |
| டைனமொ கிவ் | 6 | 1 | 2 | 3 | 5 |
குழு C
மிகவும் விறுவிறுப்பான போட்டிகளைக் கொண்ட இந்த குழுவுக்கான போட்டிகளின் நிறைவில் பிரபல பார்சிலோனா அணி, தாம் விளையாடிய 6 போட்டிகளில் 5இல் வெற்றி பெற்று 15 புள்ளிகளைப் பெற்றது. அதற்கு அடுத்த படியாக மன்ஷஸ்டட் சிடி அணி 9 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியது.
| அணி | போட்டி | வெற்றி | சமநிலை | தோல்வி | புள்ளிகள் |
| பார்சிலோனா | 6 | 5 | 0 | 1 | 15 |
| மன்ஷஸ்டட் சிடி | 6 | 2 | 3 | 1 | 9 |
| B.M’ க்லாபாஷ் | 6 | 1 | 2 | 3 | 5 |
| செல்டிக் | 6 | 0 | 3 | 3 | 3 |
குழு D
இக்குழுவில் இருந்தும் தாம் விளையாடிய 6 போட்டிகளில் 5இல் வெற்றி பெற்ற அட்லான்டிகோ மெட்ரிட் அணியும், இரண்டாம் இடத்தைப் பெற்ற பயென் முனிச் அணியும் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகின.
| அணி | போட்டி | வெற்றி | சமநிலை | தோல்வி | புள்ளிகள் |
| அட்லான்டிகோ மெட்ரிட் | 6 | 5 | 0 | 1 | 15 |
| பயென் முனிச் | 6 | 4 | 0 | 2 | 12 |
| FC ரொஸ்டொவ் | 6 | 1 | 2 | 3 | 5 |
| PSV | 6 | 0 | 2 | 4 | 2 |
குழு E
இக்குழுவில் இடம்பெற்ற அணிகளின் போட்டிகளின்மூலம் கால்பந்து ரசிகர்களுக்கு விறுவிறுப்பான போட்டிகளை காணக்கூடியதாக இருந்தது. இதில் இருந்து 11 புள்ளிகளுடன் முதல் இடத்தினைப் பெற்ற மொனாகோ அணியும், 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தினைப் பிடித்த பயெர் லெவெர்குசென் அணியும் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகின.
| அணி | போட்டி | வெற்றி | சமநிலை | தோல்வி | புள்ளிகள் |
| மொனாகோ | 6 | 3 | 2 | 1 | 11 |
| பயெர் லெவெர்குசென் | 6 | 2 | 4 | 0 | 10 |
| டொட்டென்ஹம் | 6 | 2 | 1 | 3 | 7 |
| CSKA மொஸ்கொவ் | 6 | 0 | 3 | 3 | 3 |
குழு F
குழு மட்டத்தில் முதல் இடத்தைப் பிடிக்கும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ரியல் மட்ரிட் அணி 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தினையே பெற்றது. பிரபல வீரர்களைக் கொண்ட மற்றொரு அணியான B. டார்ட்மன்ட் 14 புள்ளிகளுடன் இக்குழுவில் முதல் இடத்தைப் பிடித்தது.
| அணி | போட்டி | வெற்றி | சமநிலை | தோல்வி | புள்ளிகள் |
| B. டார்ட்மன்ட் | 6 | 4 | 2 | 0 | 14 |
| ரியல் மட்ரிட் | 6 | 3 | 3 | 0 | 12 |
| லீஜியா வோர்சோவ் | 6 | 1 | 1 | 4 | 4 |
| ஸ்போடிங் | 6 | 1 | 0 | 5 | 3 |
குழு G
இக்குழுவின் போட்டிகளின் நிறைவில் 13 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பெற்ற லெஸ்டர் சிடி அணியும், 11 புள்ளிகளைப் பெற்ற FC போர்டோ அணியும் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகின.
| அணி | போட்டி | வெற்றி | சமநிலை | தோல்வி | புள்ளிகள் |
| லெஸ்டர் சிடி | 6 | 4 | 1 | 1 | 13 |
| FC போர்டோ | 6 | 3 | 2 | 1 | 11 |
| FC கொபன்ஹெகன் | 6 | 2 | 3 | 1 | 9 |
| புருஜ் கழகம் | 6 | 0 | 0 | 6 | 0 |
குழு H
இத்தொடரில் உள்ள மற்றைய குழுவான குழு Hஇல் இருந்து ஜுவன்டஸ் அணி 14 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், செவில்லா அணி 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகின.
| அணி | போட்டி | வெற்றி | சமநிலை | தோல்வி | புள்ளிகள் |
| ஜுவன்டஸ் | 6 | 4 | 2 | 0 | 14 |
| செவில்லா | 6 | 3 | 2 | 1 | 11 |
| ஒ. லியொன்னைஸ் | 6 | 2 | 2 | 2 | 8 |
| டினமோ சக்ரெப் | 6 | 0 | 0 | 6 | 0 |




















