ஒருநாள் தொடருக்கான ஐக்கிய அரபு இராச்சிய அணி அறிவிப்பு

202
Icc-cricket.com

ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடருக்கான ஐக்கிய அரபு இராச்சிய அணி அறிவிக்கப்பட்டுள்ளதற்கமைய அணியின் தலைவராக தொடர்ந்தும் மொஹமட் நவீட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் அணியானது ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியுடன் நான்கு ஒரு நாள் சர்வதேச போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. குறித்த நான்கு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்கான ஜிம்பாப்வே அணியின் முதல் இரண்டு போட்டிகளுக்குமான குழாம் நேற்று (08) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய அரபு இராச்சிய அணியின் 14 பேர் கொண்ட குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் வலீத் புகாடிர்னால் இன்று (09)  வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சிய அணியானது சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் முழுமையான அந்தஸ்து பெற்றதன் பின்னர் அவர்கள் பங்குகொள்ளும் முதலாவது இருதரப்பு சர்வதேச தொடராக குறித்த தொடர் அமைந்திருக்கின்றது. இந்நிலையில் முதல் தொடரை வெற்றி கொள்ள வேண்டும் என்ற ரீதியில் ஜிம்பாப்வே அணிக்கு சவால் விடுக்கக்கூடிய வகையில் பலம் வாய்ந்த அணியொன்று தற்போது  பெயரிடப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு மாதங்களில் ஆரம்பமாகவுள்ள .சி.சி உலகக்கிண்ண தொடருக்காக கடந்த வரும் நடைபெற்ற தகுதிகான் போட்டியின் பின்னர் ஐக்கிய அரபு இராச்சிய அணி 13 மாதங்களுக்கு பிறகு இரண்டாவது தடைவையாக ஜிம்பாப்வே மண் நோக்கி பயணமாகின்றது.

அந்த வகையில் 35 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஐக்கிய அரபு இராச்சிய அணியின் அனுபவ வீரரான 31 வயதுடைய சகலதுறை வீரர் மொஹம்மட் நவீட் அணியின் தலைவராக தொடர்ந்து செயற்படும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த தொடரில் இருந்து வெளியேறியிருந்த சகலதுறை வீரரான ரொஹான் முஸ்தபா மீண்டும் அணியில் இணைந்துள்ளார். அத்துடன் 1,000 ஒருநாள் சர்வதேச ஓட்டங்களை கடந்துள்ள சைமன் அன்வர் மற்றும் இம்ரான் ஹைதர் ஆகிய அனுபவ வீரர்கள் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளனர். இருந்தாலும் ஐக்கிய அரபு இராச்சிய அணியானது எந்தவொரு வீரர்களுக்கும் இத்;தொடரில் ஒருநாள் அறிமுகத்தை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வருட ஆரம்பத்தில் நேபாள கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடியிருந்த ஐக்கிய அரபு இராச்சிய அணியானது தொடரை 2-1 என்ற அடிப்படையில் தொடரை இழந்திருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு இராச்;சிய அணியின் ஒருநாள் குழாம்

மொஹம்மட் நவீட் (அணித்தலைவர்), ரொஹான் முஸ்தபா, அஸ்பாக் அஹமட், சைமன் அன்வர், முஹம்மட் உஸ்மான், சி.பி றிஸ்வான், சிராக் சுரி, முஹம்மட் போட்டா, குலாம் ஷாபிர், சுல்தான் அஹமட், இம்ரான் ஹைதர், ஆமிர் ஹயாட், ஸாஹூர் கான், காதிர் அஹமட்

ஒருநாள் போட்டி தொடர் அட்டவணை.

  • 10 ஏப்ரல்முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டிஹராரே
  • 12 ஏப்ரல்இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டிஹராரே
  • 14 ஏப்ரல்மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டிஹராரே
  • 16 ஏப்ரல்நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டிஹராரே