அபிஷேக்கின் அதிரடிப் பந்துவீச்சில் சுருண்ட பிலியந்தலை மத்திய கல்லூரி

88
Sri Lanka Schools Cricket

சிங்கர் நிறுவனம் 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் – II பாடசாலைகள் இடையே நடாத்தும், இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்று (6) பிலியந்தலை மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் மோதிய போட்டி ஆரம்பமாகியது. 

இன்று (6) போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில், யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர்கள் வலுவான நிலையில் காணப்படுகின்றனர்.

ஹம்பாந்தோட்டை மைதானத்தில் சர்வதேசப் போட்டிகள் நடத்த தீர்மானம்

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானத்தில் 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் எந்தவொரு சர்வதேசப் போட்டிகளும் நடத்தப்படாமல்

மத்தேகொட சப்பர் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற யாழ். சென் ஜோன்ஸ் அணியின் தலைவர் நாகேந்திரராஜா செளமியன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை மைதானச் சொந்தக்காரர்களான பிலியந்தலை மத்திய கல்லூரி வீரர்களுக்கு வழங்கினார். 

இதன்படி, போட்டியில் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பிலியந்தலை மத்திய கல்லூரி அணி, சென். ஜோன்ஸ் கல்லூரியின் வேகப் பந்துவீச்சாளர்களான இளம் வீரர் அன்டண் அபிஷேக் மற்றும் சுகேதன் ஆகியோரின் பந்துவீச்சினை எதிர்கொள்வதில் தடுமாற்றம் காட்டியது.

தொடர்ந்து யாழ். வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாது போன பிலியந்தலை மத்திய கல்லூரி அணியினர் 31.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் முதல் நாளின் மதிய போசணத்திற்கு முன்பாக பறிகொடுத்து தமது முதல் இன்னிங்ஸிற்காக வெறும் 67 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தனர். 

Photos: Piliyandala Central College vs St. John’s College, Jaffna | U19 Division 2 Cricket Tournament 2019/20

பிலியந்தலை அணியின் துடுப்பாட்டம் சார்பில், சிதும் நிம்லக்க 16 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடிய ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறினார். இதேநேரம், சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் வெறும் 15 வயது நிரம்பிய அன்டன் அபிஷேக் 15 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைச் சாய்க்க, சுகேதன் 3 விக்கெட்டுகளை சுருட்டினார்.

தொடர்ந்து, யாழ். மத்திய கல்லூரி அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்து தமது முதல் இன்னிங்ஸில் 51.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 155 ஓட்டங்கள் பெற்றது.

சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில், பிரணவன் சிவராஜா 38 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் அதிகூடிய ஓட்டங்களை பதிவு செய்ய, அணித் தலைவர் செளமியன்  34 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

மறுமுனையில், பிலியந்தலை மத்திய கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் ருச்சிர அதிகாரி, சந்துன் சத்சார ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர். 

தொடர்ந்து, போட்டியின் முதல் நாளிலேயே 88 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய பிலியந்தலை மத்திய கல்லூரி அணி போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 20 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி காணப்படுகின்றது.

பிலியந்தலை அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் ஆரம்ப வீரர்களான ஜமித் டில்சான் 13 ஓட்டங்களுடனும், நெத்ம அஷேன் 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் காணப்படுகின்றனர்.

போட்டியின் சுருக்கம்

பிலியந்தலை மத்திய கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 67 (31.1) சித்தும் நிம்லக்க 16, அன்டண் அபிஷேக் 6/15, சுகேதன் 9/3

சென். ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 155 (51.1) பிரணவன் சிவராஜா 38, செளமியன் 34, டினோஷன் 33, சந்துன் சத்சர 31/4, ருச்சிர அதிகாரி 38/4

பிலியந்தலை மத்திய கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 20/0 (9)

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க