சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட ‘டிவிஷன் – I’ பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் 5 போட்டிகள் இன்று நிறைவடைந்துள்ளன.

மஹிந்த கல்லூரி, காலி எதிர் ரோயல் கல்லூரி, கொழும்பு

ரோயல் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவடைந்தது.

மஹிந்த கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தி இருந்ததுடன் ரோயல் கல்லூரி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

தொடர்ந்து தமது இரண்டாம் நாளைத் தொடர்ந்த ரோயல் கல்லூரி 209 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பாக பசிந்து சூரியபண்டார 90 ஓட்டங்களையும் கயான் திசநாயக 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் மஹிந்த கல்லூரி சார்பாக் விக்கும் மலிங்க 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கவிந்து எதிரிவீர 66 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் பசான் பெத்ஜன்கோட 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடிய மஹிந்த கல்லூரி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவடைய, போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது. மஹிந்த கல்லூரி சார்பில் வினுர டுல்சார ஆட்டமிழக்காது 104 ஓட்டங்களையும் கெவின் 60 ஓட்டங்களையும் கவிந்து எதிரிவீர ஆட்டமிழக்காது 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ரோயல் கல்லூரி சார்பாக கமில் மிஷார 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

வலுவான நிலையில் ஸாஹிராக் கல்லூரி

போட்டியின் சுருக்கம்

மஹிந்த கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்) – 258/8d (66.5) – பிரமித் தேவரப்பெரும 64*, கவிந்து எதிரிவீர 54, ஹன்சிக வெளிஹிந்த 40, அஷேன் கந்தம்பி 20, லஹிரு மதுஷங்க 3/41, பிமல் வீரசேகர 2/54

ரோயல் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 209 (57.4) – பசிந்து சூரியபண்டார 90, கயான் திசாநாயக 40, விக்கும் மலிங்க 2/16, கவிந்து எதிரிவீர 3/66, பசான் பெத்ஜன்கோட 3/20

மஹிந்த கல்லூரி, காலி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 247/5 (65) – வினுர துல்ஷார 104*, கெவின் 60, கவிந்து எதிரிவீர 26*, கமில் மிஷார 2/62

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.


சாஹிரா கல்லூரி, மருதானை எதிர் புனித செர்வதியஸ் கல்லூரி, மாத்தறை

சாஹிரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.

சாஹிரா கல்லூரி தமது முதல் இன்னிங்சுகாக சகல விக்கெட்டுகளையும் இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றது. புனித செர்வதியஸ் கல்லூரி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 1 விக்கெட் இழப்பிற்கு 74 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. தமது இரண்டாம் நாளைத் தொடர்ந்த புனித செர்வதியஸ் கல்லூரி 474 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. புனித செர்வதியஸ் கல்லூரி சார்பில் ரிசிற லக்வின் 106 ஓட்டங்களையும், புஷ்பித்த டில்ஷான் 79 ஓட்டங்களையும், கேஷர நுவந்த 75 ஓட்டங்களையும், சந்தரு நெத்மின 71 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் சாஹிராக் கல்லூரி சார்பாக முஹம்மத் ஹாஷிமி, முஹம்மத் டில்ஹான், இம்தியாஸ் ராசா, முஹம்மத் ரிஷாத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

சாஹிரா கல்லூரி, மருதானை – 293 (76.3) – முஹம்மத் ஷமாஸ் 61, யசித் நிர்மல 46, ரித்மிக நிமேஷ் 42, சதுர தில்ருக்ஷான் 32, அரவிந்த் ராஜேந்திரன் 28, சுபுன் கவிந்த 5/46, சேதக தேனுவண் 2/30, கேஷர நுவந்த 2/36

புனித செர்வதியஸ் கல்லூரி, மாத்தறை – 474 (113.4) – ரிசிற லக்வின் 106, புஷ்பித்த டில்ஷான் 79, கேஷர நுவந்த 75, சந்தரு நெத்மின 71, திலான் ப்ரஷான் 32*, முஹம்மத் ஹாஷிமி 2/52, முஹம்மத் தில்ஹான் 2/76, இம்தியாஸ் ராசா 2/81, முஹம்மத் ரிஷாத் 2/50


ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ எதிர் தர்மராஜ கல்லூரி, கண்டி

தர்மராஜ கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் ஜோசப் வாஸ் கல்லூரி அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 96 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. தொடர்ந்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய தர்மராஜ கல்லூரி முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது விக்கெட் இழப்பு எதுவுமின்றி 12 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இரண்டாம் நாள் தமது இன்னிங்சைத் தொடர்ந்த தர்மராஜ கல்லூரி 80 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்து வீச்சில் ஜோசப் வாஸ் கல்லூரி அணியின் தனஞ்சய பெரேரா 28 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து பலோவ் ஓன் (Follow on) முறைக்கு தள்ளப்பட்ட தர்மராஜ கல்லூரி அணி இரண்டாவது இன்னிங்சுக்காக 124 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த்தது. தர்மராஜ கல்லூரி சார்பாக இசுரு தயானந்த 44 ஓட்டங்களையும் சர்மால் முஹாந்திரம் 40 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஜோசப் வாஸ் கல்லூரி சார்பாக கவிஷ்க பெர்னாண்டோ 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், தனஞ்சய பெரேரா 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் தினேத் பெர்னாண்டோ 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ (முதல் இன்னிங்ஸ்) – 300/9d (88) – திலான் பிரதீப்த 122, யொஹான் பீரிஸ் 37, தினேத் பெர்னாண்டோ 29.  யசிந்த சமரரத்ன 3/54

தர்மராஜ கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 80 (45.4) – தனஞ்சய பெரேரா 6/28

தர்மராஜ கல்லூரி, கண்டி (இரண்டாவது இன்னிங்ஸ்), F/O 124 (60) – இசுரு தயானந்த 44, ஷர்மால் முஹாந்திரம் 40. கவிஷ்க பெர்னாண்டோ 4/16, தனஞ்சய பெரேரா 3/31, தினெத் பெர்னாண்டோ 2/25

முடிவு – ஜோசப் வாஸ் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 96 ஓட்டங்களால் வெற்றி.


மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு எதிர் புனித பேதுரு கல்லூரி, கொழும்பு

கதிரான மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது. புனித பேதுரு கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது விக்கெட் இழப்பு எதுவுமின்றி 16 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

மாஸ் சிலுவெட்டா அணியிடம் படுதோல்வியடைந்த சிங்கர் ஸ்ரீ லங்கா

தொடர்ந்து தமது இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளை ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி சார்பில் ரொஷென் பெர்னாண்டோ 36 ஓட்டங்களையும், சதுர அனுராத 48 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் புனித பேதுரு கல்லூரி சார்பில் முஹம்மத் அமீன் 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.   

245 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய புனித பேதுரு கல்லூரி 185 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பில் ஷிவான் பெரேரா 44 ஓட்டங்களையும், சந்தூஷ்  குணதிலக்க 37 ஓட்டங்களையும், ஹிம்சர ரந்தெணி 29 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி சார்பாக ரவிந்து பெர்னாண்டோ 65 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் பசிந்து மாதவ 76 ஒட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 191 (42.3) – லசித் குறுஸ்புள்ளே 57, நவீன் நிர்மல் 36, ஷெஹான் மனீஷ 33, பசிந்து மாதவ 20*, முஹம்மத் அமீன் 6/56, ஹசித கிரியெல்ல 2/27, சச்சின் சில்வா 2/46  

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 111 (40.1) – நவீன் நிர்மல் 4/36   

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 146/5d (34) – சதுர அனுராத 48, ரொஷென் பெர்னாண்டோ 36, அஷான் பெர்னாண்டோ 39, முஹம்மத் அமீன் 4/47

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 185 (57.2) – ஷிவான் பெரேரா 44, சந்துஷ் குணதிலக்க 37, லக்மின பெரேரா 23, ஹிம்சர ரந்தெனி 29, ரவிந்து பெர்னாண்டோ 5/65, பசிந்து மாதவ 4/76

முடிவு –  மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 60 ஓட்டங்களால் வெற்றி


புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை எதிர் தர்மபால கல்லூரி, பன்னிப்பிட்டிய

புனித தோமியர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் புனித தோமியர் கல்லூரி அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 56 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

புனித தோமியர் கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக 8 விக்கெட்டுகளை இழந்து 261 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. அதனைத் தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்சைத் தொடர்ந்த தர்மபால கல்லூரி 115 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தர்மபால கல்லூரி சார்பாக அவிஷ்க ஹசரிந்து 24 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் புனித தோமியர் கல்லூரியின் கலன பெரேரா 39 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் டேலோன் பீரிஸ் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பலோவ் ஓன் (Follow on) முறைக்கு தள்ளப்பட்ட தர்மபால கல்லூரி தமது இரண்டாவது இன்னிங்சுக்காக 90 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. புனித தோமியர் கல்லூரியின் டேலோன் பீரிஸ் 40 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் கலன பெரேரா 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (முதல் இன்னிங்ஸ்) – 261/8d (63.4) – கலன பெரேரா 73, மனீஷ ரூபசிங்ஹ 52, திசர ஹபுயின்ன 45, லக்ஷித சந்தருவன் 2/22, சமிந்து லக்ஷித 2/60

தர்மபால கல்லூரி, பன்னிப்பிட்டிய (முதல் இன்னிங்ஸ்) – 115 (40.2) – அவிஷ்க ஹசரிந்து 24. கலன பெரேரா 5/39, டேலோன் பீரிஸ் 4/25

தர்மபால கல்லூரி, பன்னிப்பிட்டிய  (இரண்டாவது இன்னிங்ஸ்) F/O – 90 (45) – டேலோன் பீரிஸ் 6/40, கலன பெரேரா 2/06

முடிவு – புனித தோமியர் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 56 ஓட்டங்களால் வெற்றி


வெஸ்லி கல்லூரி, கொழும்பு எதிர் புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி

வெஸ்லி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் புனித அந்தோனியார் கல்லூரி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றது

வெஸ்லி கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பில் ஷெனால் டெங்கள் ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களைப் பெற்றதுடன் சிதத் தர்மசிரிவர்தன 32 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் புனித அந்தோனியார் கல்லூரி சார்பாக நவோதய விஜயகுமார 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ஜனிது ஹிம்சார 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

புனித அந்தோனியார் கல்லூரி தமது முதலாவது இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பில் நவோதய விஜெகுமார 53 ஓட்டங்களையும், கல்ஹார சேனாரத்ன 52 ஓட்டங்களையும் தீக்ஷ குணசிங்ஹ 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் வெஸ்லி கல்லூரியின் சகுந்த லியனகே 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் ஷெனால் டெங்கள் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த வெஸ்லி கல்லூரி 112 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பாக கவிந்தன பெரேரா 40 ஓட்டங்களையும் சித்த் தர்மசிரிவர்தன 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் நிம்னக ஜயதிலக 48 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 140 (43.1) – ஷெனால் டெங்கள் 39*, சிதத் தர்மசிரிவர்தன 32, நவோதய விஜெகுமார 3/24, ஜனிது ஹிம்சர 2/08, நிம்னக ஜயதிலக 4/42

புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 265 (64.4) – நவோதய விஜெகுமார 53, கல்ஹார சேனாரத்ன 52, தீக்ஷ குணசிங்ஹ 50, ஜனிது ஹிம்சர 26, சகுந்த லியனகே 4/30, ஷெனால் டெங்கள் 2/25

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 112 (37) – கவிந்த பெரேரா 40, நிம்னக ஜயதிலக 9/48

முடிவு – புனித அந்தோனியார் கல்லூரி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 13 ஓட்டங்களால் வெற்றி