அரையிறுதிக்கு முன்னேறியது நாலந்த

245
U15 Quarter final - Nalanda vs Holy Cross

பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதிற்கு கீழ்பட்டோருக்கான கிரிக்கட் சுற்றுத்தொடரின் நான்காவது காலிறுதிப் போட்டியில் ஹோலி கிராஸ் கல்லூரியை தோற்கடித்த கொழும்பு நாலந்த கல்லூரி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

முதல் நாள் ஆட்டம் நிறைவடையும் போது 1 விக்கட்டை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றிருந்த நாலந்த அணி,  மேலும் 197 ஓட்டங்களைப் பெற்றால் முதல் இனிங்ஸ் வெற்றி என்ற நிலையில் களமிறங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீன் டி சில்வா ஆட்டமிழக்காது 81 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

நாலந்த கல்லூரி 7 விக்கட்டுகளை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் மழை குறுக்கிட்டது. எனினும் புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்த நாலந்த அணி அரையிறுதிக்குத் தெரிவானது. ஹோலி கிராஸ் கல்லூரி சார்பாகப் பந்துவீச்சில் உமயங்க சுவாரிஸ், ருத்தில அகலங்க மற்றும் விஹங்க குணரத்ன ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் கைப்பற்றினர்.

முன்னர், நாணய சுழற்சியில் வென்ற ஹோலி கிராஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 249 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. ஷெரான் பொன்சேகா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 92 ஓட்டங்களைக் குவித்தார். நாலந்த கல்லூரி சார்பாகப் பந்து வீச்சில் ஜிதேஷ் வாசல 38 ஓட்டங்களை வழங்கி 4 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்படி புனித செபஸ்டியன் கல்லூரி, பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கல்லூரி, புனித தோமஸ் கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரி ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தேர்வாகியுள்ளன.

போட்டியின் சுருக்கம்

ஹோலி கிராஸ் கல்லூரி  249/10 (72.4)

ஷெரான் பொன்சேகா 92, உமயங்க சுவாரிஸ் 44, பெதும் தர்ஷன 38

ஜிதேஷ் வாசல 4/38, அஷென் வலிசுந்தர 2/18

நாலந்த கல்லூரி  248/7 (80.5)

ரவீன் டி சில்வா 81*, அவிஷ்க பெரேரா 63, ரஷான் திஸாநாயக்க 36

உமயங்க சுவாரிஸ் 2/32, ருத்தில அகலங்க 2/71, விஹங்க குணரத்ன 2/79