அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி குறித்து இரு முக்கிய விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்தவகையில் இலங்கை டெஸ்ட் குழாத்தில் சுழல்பந்துவீச்சுத்துறைக்கு பலம் சேர்க்கும் விதமாக சுழல் சகலதுறைவீரரான ரமேஷ் மெண்டிஸ் இணைக்கப்பட்டுள்ளார்.
>>முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியினைத் தழுவிய இலங்கை வீரர்கள்<<
ரமேஷ் மெண்டிஸ் மூர்ஸ் (Moors) கிரிக்கெட் கழகத்திற்காக அண்மையில் நடந்த முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளில் திறமையினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் உபாதைச்சிக்கல்கள் காரணமாக அவுஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடாது போயிருந்த ஆரம்பத் துடுப்பாட்டவீரர் பெதும் நிஸ்ஸங்க நேற்று (02) தொடக்கம் மீண்டும் பயிற்சிகளை ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெதும் நிஸ்ஸங்க அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கான அதிக சாத்தியப்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது.
கடந்த வாரம் காலியில் நடைபெற்றிருந்த அவுஸ்திரேலிய – இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருந்ததோடு ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.
இந்த நிலையில் இரு அணிகளும் பங்கேற்கும் டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி இம்மாதம் (06) திகதி காலியில் ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<