அபிஷேக் ஆனந்தகுமாரின் அதிரடி பந்துவீச்சுடன் திரித்துவ கல்லூரி வெற்றி

351
Trinity College vs St. Anthony's College

திரித்துவக் கல்லூரியின் வலதுகை சுழல் பந்துவீச்சாளரான அபிஷேக் ஆனந்தகுமாரின் அபார பந்துவீச்சின் மூலம் புனித அந்தோனியார் கல்லூரி உடனான றிச்சர்ட் அளுவிஹார கிண்ணத்துக்காக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 58 ஓட்டங்ளால் திரித்துவக் கல்லூரி அணி வெற்றியீட்டியது.

கண்டி திரித்துவக் கல்லூரிக்கும், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற 38 ஆவது மலையக நீலங்களின் ஒருநாள் கிரிக்கெட் சமர், இன்று (16) கண்டி அஸ்கிரிய மைதானத்தில் நடைபெற்றது.

மலையக நீலங்களின் சமரில் புனித அந்தோனியார் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி

இந்த ஆண்டு 102 ஆவது தடவையாக இடம்பெற்ற கண்டி திரித்துவ கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கல்லூரி

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கண்டி திரித்துவக் கல்லூரி அணித் தலைவர் கவிஷ்க சேனாதீர முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இதன்படி, முதலில் துடுப்பாடக் களமிறங்கிய கண்டி திரித்துவக் கல்லூரி, கடும் தடுமாற்றத்துக்கு மத்தியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது.

மத்திய வரிசையில் வந்த அஷான் லொகுகெடிய பெற்ற 35 ஓட்டங்களே திரித்துவக் கல்லூரியின் அதிகூடிய ஓட்டங்களாகும்.

புனித அந்தோனியார் பந்துவீச்சில் நிம்னக சேனாதீர 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

Photos: Trinity College vs St. Anthony’s College – 38th One Day Encounter

189 என்ற இலகுவான இலக்கை நோக்கி களமிறங்கிய புனித அந்தோனியார் கல்லூரியும் ஆரம்பத்தில் நிதானமாக துடுப்பாடியிருந்தாலும், எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது.

அந்த அணி சார்பாக சமிந்து விக்ரமசிங்க 30 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்று நம்பிக்கையளித்த போதிலும் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, புனித அந்தோனியார் கல்லூரி 130 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட திரித்துவக் கல்லூரியின் அபிஷேக் ஆனந்தகுமார் 23 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதன்படி திரித்துவக் கல்லூரி 58 ஓட்டங்களினால் வெற்றியீட்டி இம்முறை மலையக நீலங்களின் ஒருநாள் சமரில் றிச்சர்ட் அளுவிஹார கிண்ணத்தை கைப்பற்றியது.

போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை திரித்துவக் கல்லூரியின் அஷான் லொகுகெடிய பெற்றுக்கொள்ள, போட்டியின் சிறப்பாட்டக்காரருக்கான விருதை அபிஷேக் ஆனந்தகுமார் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, கடந்த வாரம் இவ்விரண்டு கல்லூரிகளுக்கும் இடையில் 102 ஆவது தடவையாக நடைபெற்ற மலையக நீலங்ளின் மாபெரும் கிரிக்கெட் சமர் சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

எனினும், இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெற்றி பெற்ற புனித அந்தோனியார் கல்லூரி மலையக நீலங்களின் சமர் வெற்றிக் கிண்ணத்தை கடந்த ஆண்டு முதல் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற திரித்துவக் கல்லூரி அணியிடம் இருந்து கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க

போட்டியின் சுருக்கம்