எட்டு முன்னணி வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ்

61
CPL

இந்த ஆண்டுக்கான (2020) கரீபியன் ப்ரீமியர் லீக் (CPL) தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக, இந்த தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்றான ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ், மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த எட்டு வீரர்களை தமது குழாத்தில் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதாக தெரிவித்திருக்கின்றது. 

ஐசிசி T20I உலகக் கிண்ணம் நடைபெறுவதில் சிக்கலா?

அவுஸ்திரேலியாவில் விதிக்கப்பட்டு…………………….

அதன்படி ஏலத்திற்காக விடுவிக்கப்படாமல் இருக்கும் வீரர்களில் அதிரடி சகலதுறை வீரர் கீரோன் பொலார்ட், ட்வேய்ன் பிராவோ, டர்ரன் பிராவோ மற்றும் சுனீல் நரேன் ஆகியோர் இந்த ஆண்டுக்கான கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரிலும் ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியினை பலப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

அதேநேரம், ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணி இந்த ஆண்டுக்கான தமது அணிக்குழாத்தில் இருந்து விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான தினேஷ் ராம்டினை விடுவித்திருக்கின்றது. ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள தினேஷ் ராம்டின் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடும் மற்றுமொரு அணிகளில் ஒன்றான சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணிக்கு மாற்றம் பெற்றுள்ளார். 

இதேநேரம், ராம்டினை தமக்காக மாற்றம் செய்துள்ள சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணி றயாத் எம்ரிட், ஈவின் லூயிஸ் மற்றும் பாபியன் அலன் உள்ளிட்ட 5 வீரர்களை இந்த ஆண்டுக்கான கரீபியன் ப்ரீமியர் லீக் தொடருக்காக தக்கவைத்திருப்பதோடு, வேகப் பந்துவீச்சாளரான றயாத் எம்ரிட்டை புதிய அணித்தலைவராகவும் அறிவித்திருக்கின்றது. 

இதேநேரம், கடந்த ஆண்டு அணித்தலைவராக செயற்பட்ட கார்லோஸ் ப்ராத்வைட் சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணியில் இருந்து இந்த ஆண்டு விடுவிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் தக்கவைத்திருக்கும் வீரர்களின் விபரம் – ஈவின் லூயிஸ், பேபியன் அலன், செல்டோன் கொல்ட்ரல், றயாத் எம்ரிட், அல்ஷாரி ஜோசேப்  

அதோடு, சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணி இந்த ஆண்டுக்கான கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் ரொபின் சிங்கிற்கு பதிலாக அவுஸ்திரேலியாவினைச் சேர்ந்த சிமோன் ஹெல்மோட்டினை தமது புதிய பயிற்சியாளராக நியமனம் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.  

மறுமுனையில், ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் தக்கவைத்திருக்கும் வீரர்களில் அனுபவ துடுப்பாட்டவீரரான லென்ட்ல் சிம்மோன்ஸ் முக்கிய இடத்தினைப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணி தக்கவைத்துள்ள வீரர்கள் – ட்வேய்ன் பிராவோ, கீய்ரன் பொலார்ட், சுனீல் நரைன், லென்ட்ல் சிம்மோன்ஸ், கேரி பியர்ரே, டியோன் வெப்ஸ்டர், அகேல் ஹொசைன்

பந்தை மிளிர வைக்க புதிய பதார்த்தம்

அவுஸ்திரேலியாவினை மையமாகக்…………………

தற்போது கொரோனா வைரஸினால் உலகில் இடம்பெற்ற அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதன் காரணமாக, இந்த ஆண்டின் ஒகஸ்டில் நடாத்த திட்டமிடப்பட்டிருக்கும் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கெடுக்கும் அணிகளுக்கு தங்களது குழாங்களில் இருக்கும் உள்நாட்டு வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ், சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் ஆகிய அணிகள் தங்களது குழாங்களில் மாற்றங்களை மேற்கொண்டிருக்கின்றன. 

இதேவேளை, கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கெடுக்கும் அணிகள் தமது வெளிநாட்டு வீரர்களில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<