இந்திய அணியின் இளம் மற்றும் அதிரடி துடுப்பாட்டவீரரான திலக் வர்மா, நியூசிலாந்துக்கு எதிரான T20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
>>இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகும் விக்ரம் ராத்தோர்<<
அவருக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக் குறைவு மற்றும் அறுவை சிகிச்சை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணியானது, T20 உலகக் கிண்ண தயார்படுத்தல்களுக்காக 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகின்றது. ஜனவரி 21ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் இந்த தொடரிலேயே திலக் வர்மா முதல் மூன்று போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் திலக் வர்மா தற்போது நலமுடன் இருப்பதாகவும், மருத்துவமனையிலிருந்து வெளியேறி வெகு விரைவில் கிரிக்கெட் பயிற்சிகளை ஆரம்பிப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திலக் வர்மா விலகியுள்ள நிலையில் நியூசிலாந்து தொடரில் முதல் மூன்று போட்டிகளுக்கும் மாற்று வீரரை BCCI இன்னும் அறிவிக்கவில்லை. அவருக்குப் பதிலாக சுப்மான் கில் அல்லது ஷ்ரேயாஸ் அய்யர் இந்திய அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் கூறப்பட்டுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















