T20 உலகக் கிண்ணத்துக்கான மூன்று மைதானங்கள் அறிவிப்பு

T20 World Cup 2024

402

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2023ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடருக்கான மூன்று மைதானங்கள் தொடர்பில் ஐசிசி அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் முதன்முறையாக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் ஒன்று நடைபெறவுள்ள நிலையில் மியாமி, நியூ யோர்க் மற்றும் டல்லாஸ் ஆகிய இடங்களில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

முக்கிய வேகப் பந்துவீச்சாளரை இழக்கும் நியூசிலாந்து அணி?

அதன்படி டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி, புளோரிடாவில் உள்ள ப்ரோவர்ட் கவுண்டி மற்றும் நியூ யோர்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி போன்ற மைதானங்களில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் நியூவ் யோர்க் ஐசனோவர் பூங்காவில் நாசாவ் கவுண்டி மைதானம் 34000 இருக்கைகளுடன் அமைக்கப்படவுள்ளதுடன், இந்தியா – பாகிஸ்தான் போட்டி இங்கு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

T20 உலகக் கிண்ணத் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் அடுத்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<