மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் கொவிட்-19 தொற்று

166

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்குழாத்தில் காணப்பட்ட நான்கு பேருக்கு, கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

திரில்லர் வெற்றியினைப் பதிவு செய்த தம்புள்ளை ஜயன்ட்ஸ்

அந்தவகையில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களான இடதுகை வேகப்பந்துவீச்சாளர் செல்டன் கொல்ட்ரல், சகலதுறைவீரர்களான ரொஸ்டன் சேஸ் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோருடன் சேர்த்து மேற்கிந்திய தீவுகள் அணி முகாமைத்துவக்குழுவில் காணப்பட்ட ஒருவருக்கும் கொவிட்-19 வைரஸ் தொற்றானது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் வைரஸ் தொற்றுக்குள்ளான அனைவரும் உடனடியாக சுயதனிமைப்படுத்தலுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதோடு, இதில் தொற்றுக்கு உள்ளான மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் எவரும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கமாட்டார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், T20I தொடர்களில் ஆடவுள்ள நிலையில், இந்த சுற்றுப்பயணத்தில் முதல்கட்டமாக பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகள் பங்கெடுக்கும் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் நாளை (13) ஆரம்பமாகின்றது.

இதேநேரம் T20I தொடரினை அடுத்து எதிர்வரும் 18ஆம் திகதி பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் பங்கெடுக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 5 புள்ளிகளை இழந்த இங்கிலாந்து அணி

அதேநேரம் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேற்கிந்திய தீவுகள் அணியின் உறுப்பினர்கள் அனைவரும் அடுத்துவரும் 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக சுயதனிமைப்படுத்தலுக்கு உட்பபடுத்தப்பட்டு, அவர்களின் உடல் நிலைமை தொடர்பில் மருத்துவ கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது..

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<