ஆஷஸ் 2ஆவது டெஸ்டில் இருந்து விலகிய அண்டர்சன், ஒல்லி ஸ்டோன்

137
Getty
 

இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன், லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய நிலையில், அந்த அணியின் மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளரான ஒல்லி ஸ்டோனும் உபாதை காரணமாக விலகியுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அவுஸ்திரேலியாவுக்கு முதல் வெற்றி

இங்கிலாந்தின் எஜ்பெஸ்டனில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஷ் தொடரி….

இங்கிலாந்துஅவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பெஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அவுஸ்திரேலியா அணி  251 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் 4 ஓவர் மட்டுமே வீசிய நிலையில் (4-3-1-0), காயமடைந்து வெளியேறினார். இது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது.  

இதன்போது கெண்டைக்கால் சதை கிழிந்து காயத்துக்குள்ளான ஜேம்ஸ் அண்டர்சனை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்திய பின்னர் அவரின் காயத்தின் தன்மை மிக மோசமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், எதிர்வரும் 12ஆம் திகதி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான 15 பேர்கொண்ட குழாத்தினை இலங்கை கிரிக்கெட் சபை…

இதற்குப் பதிலாக உலகக் கிண்ண தொடரில் அசத்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர், டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் உபாதை காரணமாக விளையாடாத ஆர்ச்சர், நேற்றுமுன்தினம் நடைபெற்ற க்ளொசஸ்டர்ஷெயார் அணிக்கெதிரான போட்டியில் சசெக்ஸ் இரண்டாம் நிலை அணிக்காக களமறங்கியிருந்தார்.   

குறித்த போட்டியில் பந்துவீச்சில் 27 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்திய அவர், துடுப்பாட்டத்தில் சதமடித்து அசத்தியிருந்தார்.  

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஒல்லி ஸ்டோன் முதுகு வலி காரணமாக தற்போது அணியில் இருந்து விலகியுள்ளார். அவர் இரண்டு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது

சர்வதேச கிரிக்கெட் வாழக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹஷிம் அம்லா

தென்னாபிரிக்க அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும் பல ஒருநாள் சாதனைகளுக்கு சொந்தக்காரருமான ஹஷிம்…

முன்னதாக, கடந்த மாதம் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கெதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியிருந்த 25 வயதான வலதுகை வேகப் பந்துவீச்சாளரான ஒல்லி ஸ்டோன், 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியருந்தார்

எனவே, இந்த இரண்டு முக்கிய வீரர்களுக்கும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இங்கிலாந்து அணிக்கு இது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதேநேரம், உபாதைக்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் ஜேம்ஸ் ண்டர்சனுக்கு ஆஷஸ் தொடர் முழுவதும் விளையாட முடியாமல் போகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<