BPL தொடரில் விளையாடவுள்ள 13 இலங்கை வீரர்கள்!

Bangladesh Premier League 2023

899

பங்களாதேஷில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரில் இலங்கை அணியைச் சேர்ந்த 13 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி மாதம் நடைபெறவுள்ள BPL தொடருக்கான வீரர்களை, ஒவ்வொரு அணிகளும் நேரடியாக ஒப்பந்தம் செய்து வந்தன. இந்தநிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற வீரர்கள் வரைவில் அணிக்குழாம்கள் இறுதிசெய்யப்பட்டுள்ளன.

ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பறிகொடுத்த T20I சம்பியன்!

அதன்படி BPL தொடரில் பங்கேற்கவுள்ள 6 அணிகளில் இலங்கை அணியின் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 5 அணிகளில் தலா 2 வீரர்கள் இடம்பெற்றுள்ளதுடன், சில்ஹெட் ஸ்ரைக்கர்ஸ் அணியில் மாத்திரம் திசர பெரேரா, கமிந்து மெண்டிஸ் மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகிய மூன்று வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

செட்டகிரோம் செலஞ்சர்ஸ் அணியில் வேகப்பந்துவீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ மற்றும் முதற்தர போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரராக பிரகாசித்துவரும் அஷான் பிரியன்ஜன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

டாக்கா டைனமைட்ஸ் அணியில் நட்சத்திர சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன, டில்ஷான் முனவீர ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதுடன், குல்னா டைகர்ஸ் அணிக்காக உபாதையிலிருந்து மீண்டுள்ள அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேநேரம் ராங்கபூர் ரைடர்ஸ் அணியில் ஜெப்ரி வெண்டர்சே மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோரும், போர்ச்சுன் பரிஷல் அணிக்காக உபாதையிலிருந்து குணமடைந்துவரும் குசல் ஜனித் பெரேரா மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரானது ஜனவரி 5ம் திகதி முதல் பெப்ரவரி 6ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BPL தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்

  • செட்டகிரொம் செலஞ்சர்ஸ் – விஷ்வ பெர்னாண்டோ, அஷான் பிரியன்ஜன்
  • டாக்கா டொமினேட்டர்ஸ் – சாமிக்க கருணாரத்ன, டில்ஷான் முனவீர
  • குல்னா டைட்டன்ஸ் – அவிஷ்க பெர்னாண்டோ, தசுன் ஷானக
  • ராங்பூர் ரைடர்ஸ் – ஜெப்ரி வெண்டர்சே, பெதும் நிஸ்ஸங்க
  • சில்ஹெட் ஸ்ரைக்கர்ஸ் – கமிந்து மெண்டிஸ், திசர பெரேரா, தனன்ஜய டி சில்வா
  • போர்ச்சுன் பரிஷல் – குசல் ஜனித் பெரேரா, சதுரங்க டி சில்வா

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<