இலங்கை வரலாற்றில் முதல் தங்கம் ஈட்டிகளால் துளைக்கப்பட்டது.

298

‘பாராலிம்பிக்’ என்பதால் தான் கொண்டாடாமல் விட்டு விட்டோமோ என்னமோ? ஒன்றை மட்டும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள், வெறும் உடற்பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு வெற்றி கொண்ட தங்கம் கிடையாது.

பதினாயிரம் மடங்கு திடகாத்திரமான உள வலிமையினால் உருவாக்கிக் கொள்ளப்பட்ட சரித்திரம். 

பாராலிம்பிக்கில் உலக சாதனையுடன் தங்கம் வென்றார் தினேஷ்

“The Greatest Five Victories in Sri Lanka Sports” பட்டியலில் டினேஷ் பிரியன்தவின் தங்கம் எழுதப்பட்டுவிட்டது. 

முழு உடற்பலம் கொண்ட மற்றைய நான்கு விளையாட்டுக்களின் பட்டியலில் பாராலிம்பிக் வெற்றியை இணைத்திருக்கிறோம் என்றால் எவ்வளவு கொண்டாடித் தீர்க்க வேண்டிய ஒரு தடகளவீரன் இந்த பிரியன்த.

1948 லண்டன் ஒலிம்பிக்கில் டங்கன் வைட் என்ற தடகள வீரர் வெள்ளிப் பதக்கம் வாங்கித்தந்து இலங்கையின் தேசிய கீதத்தை ஒலிம்பிக் அரங்கில் முதல் தடவையாக ஒலிக்க வைத்திருந்தார். 

அப்போது எமது நாட்டிற்கு இலங்கை என்ற பெயர் கூட கிடையாது. அது சிலோன் நாட்டின் தேசிய கீதமாகவே ஒலித்திருந்தது. 

எமது தேசிய கீதம் 72 வருடங்கள் கடந்து மீண்டும் ஒலித்திருக்கிறது நேற்று டோக்கியோ தடத்தில். சுதந்திர தினத்தில் சதுக்கத்தில் ஒலிக்கப்படும் தேச கீதமே அவ்வளவாய் உணர்ச்சிவசப்படுத்தி விடும். 

அதுவே தடகள வீரர்களின் உலகப் கோப்பையான ஒலிம்பிக்கில் கேட்கும் போது, விளையாட்டுக்களை தீராக் காதலால் சுவாசிக்கும் ஒவ்வொரு இலங்கையனும் எவ்வளவு உணர்ச்சிவசப்பட்டிருப்பான். 

Really Proud of You Dinesh Priyantha!

உலக பாரா சம்பியன்ஷிப்களில் இரண்டு வெள்ளி, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஒரு தங்கம், றியோ பாராலிம்பிக்கில் ஒரு வெண்கலத்துடன் (2016) டோக்கியோ பாராலிம்பிக் சென்ற பிரியந்த போட்டிகளில் கலந்து கொள்ள முன்னரே சொல்லியிருந்தார் “தங்கம் வென்று விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று. 

“Self Belief and Hard Work Will Always Earn Your Success” – Virat Kohli

முழுக்க முழுக்க பிரியந்தவிற்கு பொருத்தமான  ஒரு கூற்று இது. அந்த சுயநம்பிக்கையால் தான் இலங்கை தடகள வரலாற்றில் முதல் தங்கத்தை வாங்கித் தந்திருக்கிறார். 

பாராலிம்பிக்கில் இலங்கை வீரர்கள் பதக்க வேட்டை

இவருடைய சிறு வயது, கதை என்பன மிகப்பெரிய Inspiration. பாடசாலைக் காலங்களில் படித்து முடித்து வந்து மாலை நேரங்களில் வயலுக்கு சென்று விடுவாராம். அதனால் அன்றைய நாட்களில் விளையாட்டுக்களில் ஈடுபட்டிருக்க முடியவில்லை பிரியந்தவினால். 

நாட்கள் பல கடந்து ஈட்டி எறிதலில் ஆர்வம் கொண்ட பிரியந்தவின் வெற்றி உலகமகா வரலாறு. 

2000 களில் சர்வதேச தடகளத்தில் வெள்ளி வென்ற சுசன்திகா ஜயசிங்கவை பள்ளிக்கூட புத்தகத்தில் பாடத்திட்டமாக வைத்து கொண்டாடினோம். இன்று பிரியந்தவின் தங்கம்.!!!

The Real Hero.! Congrats Man ❤

 

நன்றி – அபியூத் கேப்ரியல்

>>மேலதிக விளையாட்டு செய்திகளுக்கு<<