கொழும்பிலிருந்து காலிக்கு மாற்றப்படும் 2வது டெஸ்ட் போட்டி!

Pakistan tour of Sri Lanka 2022

874

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் இந்தப்போட்டித்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என ஏற்கனவே வெளியிடப்பட்ட போட்டி அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் கொழும்பில் ஏற்பட்டுவரும் அரசியல் குழறுபடிகள் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த தீர்மானத்தை இரண்டு கிரிக்கெட் சபைகளும் இணைந்து மேற்கொண்டுள்ளன.

அதன்படி, இரண்டாவது டெஸ்ட் போட்டிாயனது எதிர்வரும் 24ம் திகதி முதல் 28ம் திகதிவரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<