ஆசியக் கிண்ண இலங்கை குழாத்தில் இருந்து வெளியேறும் சமீர

612

ஆசியக் கிண்ண T20I தொடருக்காக அறிவிக்கப்பட்ட 20 பேர் அடங்கிய இலங்கை குழாத்தில் இருந்து முன்னணி வேகப்பந்துவீச்சாளரான துஷ்மன்த சமீர விலகியிருக்கின்றார்.

>> ஆசியக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

துஷ்மன்த சமீர பயிற்சிகளை மேற்கொண்ட போது அவரின் இடது காலில் ஏற்பட்ட உபாதையின் காரணமாகவே, அவர் ஆசியக் கிண்ண T20I தொடருக்கான இலங்கை குழாத்தில் இருந்து விலகியிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை அணிக்கு ஆசியக் கிண்ண T20I தொடரில் துஷ்மன்த சமீரவின் இழப்பு பாரிய பின்னடைவாக மாறிய போதும், அது அண்மையில் நிறைவடைந்த அழைப்பு T20 தொடரில் பிரகாசித்த அசித்த பெர்னாந்து, டில்ஷான் மதுசங்க போன்ற இளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தேசிய அணியில் சாதிப்பதற்கான ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதேவேளை துஷ்மன்த சமீரவின் பிரதியீட்டு வீரராக லசித் மாலிங்க பாணியில் பந்துவீசும் நுவான் துஷார ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தில் மேலதிக வீரராக பெயரிடப்பட்ட நிலையில், விளையாட்டு அமைச்சரின் அனுமதியினைத் தொடர்ந்து அவர் இலங்கை அணியில் இணையவிருக்கின்றார்.

>> ஆசியக்கிண்ணத்திலிருந்து வெளியேறும் பாகிஸ்தானின் முன்னணி பந்துவீச்சாளர்!

அதேநேரம் மேலதிக வீரராக வரவுள்ள நுவான் துஷாரவுடன் தினேஷ் சந்திமால் மற்றும் நுவனிது பெர்னாண்டோ ஆகிய வீரர்களும் ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாத்தில் மேலதிக வீரர்களாக மாறியுள்ளதோடு, இவர்கள் எவரும் இலங்கை குழாத்துடன் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணமாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<