லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஆடி வருகின்ற கோல் மார்வல்ஸ் அணிக்காக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மிலான் ரத்நாயக்க மற்றும் நியூசிலாந்து வீரர் ஜேக்கப் டஃபி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் முறையே இலங்கை வீரர் லஹிரு குமார மற்றும் ஜிம்பாப்வே வீரர் சீன் வில்லியம்ஸ் ஆகிய இருவருக்கும் பதிலாக கோல் அணியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
இலங்கையின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமார காயத்திலிருந்து இதுவரை குணமடையவில்லை. அதேபோல சீன் வில்லியம்ஸ் கடவுச்சீட்டு பிரச்சினையால்...