ஆசியக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தாலும், அடுத்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றியீட்டி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றமைக்கான காரணங்கள்,...
பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்மற்றும் முத்தரப்பு T20I தொடர்களுக்கான இலங்கை குழாம்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை ஒருநாள் குழாத்தில் ஐந்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேகப்பந்துவீச்சாளர் டில்சான் மதுசங்க உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடரில் மீண்டும் மேட் ஹென்ரி
எனவே அவருக்கு பதிலாக எசான் மாலிங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், மிலான் ரத்நாயக்க, நுவனிது பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே மற்றும் நிசான மதுஷ்க ஆகியோருக்கு பதிலாக கமில் மிஷார, லஹிரு உதார, பிரமோத் மதுசான் மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை ஒருநாள் குழாம்
சரித் அசலங்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, லஹிரு உதார, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹஸரங்க, மஹீஸ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, துஷ்மந்த சமீர, அசித பெர்னாண்டோ, பிரமோத் மதுசான், எசான் மாலிங்க
இதேவேளை பாகிஸ்தான், சிம்பாப்வே அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள முத்தரப்பு T20I தொடருக்கான இலங்கை குழாத்தில் முக்கியமான சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் உபாதை காரணமாக மதீஷ பதிரண அணியில் இணைக்கப்படவில்லை. இவருடன் நுவனிது பெர்னாண்டோ, சாமிக்க கருணாரத்ன, துனித் வெல்லாலகே மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மதீஷ பதிரணவுக்கு பதிலாக அசித பெர்னாண்டோ அணிக்கு திரும்பியுள்ளதுடன், பானுக ராஜபக்ஷ, எசான் மாலிங்க, துஷான் ஹேமந்த மற்றும் ஜனித் லியனகே ஆகியோர் அணியில் இணைக்கப்படடுள்ளனர்.
இதில் பானுக ராஜபக்ஷ இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்ததுடன், மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்திய டெஸ்ட் குழாத்தில் மீண்டும் ரிஷப் பண்ட்
இலங்கை T20I குழாம்
சரித் அசலங்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தசுன் ஷானக, கமில் மிஷார, கமிந்து மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியனகே, வனிந்து ஹஸரங்க, மஹீஸ் தீக்ஷன, துஷான் ஹேமந்த, துஷ்மந்த சமீர, நுவான் துஷார, அசித பெர்னாண்டோ, எசான் மாலிங்க
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இம்மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், முத்தரப்பு T20I 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<