மோசமான சாதனையை தன்வசப்படுத்திய சூர்யகுமார் யாதவ்!

Australia tour of India 2023

241

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக முதல் பந்தில் மூன்று தடவைகள் (Golden Ducks) ஆட்டமிழந்த முதல் இந்திய துடுப்பாட்ட வீரர் என்ற மோசமான சாதனையை சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார்.

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரை அவுஸ்திரேலிய அணி 2-1 என வெற்றிக்கொண்டுள்ளது.

சமாஸ், விதுஷனின் ஆட்டத்தோடு சம்பியனான மூர்ஸ் விளையாட்டுக் கழகம்

குறித்த இந்த தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் தான் எதிர்கொண்ட முதல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தார். முதலிரண்டு போட்டிகளில் மிச்சல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்திருந்ததுடன், இறுதியாக நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அஸ்டன் ஏகாரின் பந்தில் ஆட்டமிழந்திருந்தார்.

அதன்படி ஒருநாள் போட்டிகளில்  தொடர்ச்சியாக முதல் பந்தில் மூன்று தடவைகள் ஆட்டமிழந்த வீரர் என்ற மோசமான சாதனையை சூர்யகுமார் யாதவ் சொந்தமாக்கியுள்ளார். இதற்கு முதல் 1994ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்திருந்தாலும், அவர் இரண்டு பந்துகளை ஆடியிருந்தார்.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை தொடர்ச்சியாக முதல் பந்தில் ஆட்டமிழந்த 14ஆவது வீரராக சூர்யகுமார் யாதவ் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<