புனித அலோசியஸ் கல்லூரி கடந்த ஆண்டு பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி காலிறுதிப் போட்டிகள் வரை முன்னேறி, தோல்வியுற்றது. எனினும், கடந்த போட்டிகளில் செய்த பிழைகளை நிவர்த்தி செய்து கொண்டு இம்முறைக்கான 2016/17 பருவகால சுற்றுப்போட்டிகளில் வெற்றிபெற எதிர்பார்த்துள்ளது.

புனித அலோசியஸ் கல்லூரியின் சுருக்கமான கிரிக்கெட் வரலாறு

1985ம் ஆண்டு ஆரம்பித்த இந்தக் கல்லூரியானது இன்று 4000 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வியளிக்கிறது.

பாடசாலை தொடக்கத்திலிருந்தே கிரிக்கெட் விளையாடப்பட்டிருந்தாலும், சில பிரபல கல்லூரிகளுக்கிடையிலான போட்டிகளில் பல சந்தர்ப்பங்களில் தோல்வியுற்றிருந்தது.

எனினும், அந்நிலையை மாற்றி, கடந்த ஆண்டு 2015/16, 20இருபது போட்டிகளில், அதிரடியாக இசிப்பதன, புனித தோமஸ் மற்றும் திரித்துவ கல்லூரி அணிகளை வென்றது. அத்துடன், 19 வயதிற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான லீக் போட்டிகளில் காலிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெற்றது. மேலும் ஒரு படி தாண்டி “சிறந்த ஒழுக்கமுள்ள அணி” என அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

2016/17 பருவகாலதுக்கான போட்டிகள்

C பிரிவிலுள்ள புனித தோமஸ் கல்லூரி, குருகுல கல்லூரி, D.S. சேனநாயக்க கல்லூரி, தர்மசோக கல்லூரி, சாஹிரா கல்லூரி, அனுராதபுர மத்திய கல்லூரி, மொரட்டுவ வித்தியாலயம் மற்றும் புனித சில்வெஸ்டர் கல்லூரி போன்ற பாடசாலைகளுடன் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், அடுத்த சுற்றுக்கான இரு பாடசாலைகளில் புனித அலோசியஸ் கல்லூரியும் ஒன்றோடு ஒன்றாக முன்னேறியது. தமது முழுப் பலத்துடன் போட்டியிட்டு, கடந்த 2015/16 பருவகால போட்டிகளில் வெளிப்படுத்திய திறமைகளை விட இம்முறை பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தக் காத்திருக்கிறது.  

சம்பிரதாயபூர்வாமாக ஆரம்பிக்கப்பட்ட இம்முறைக்கான பருவகால முதல் இரண்டு போட்டிகளில், ஹோலி கிராஸ் கல்லூரியுடனான முதல் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றும், புனித பேதுரு கல்லூரியுடன், முதல் இனிங்ஸில் தோல்வியுற்றும் இருந்தது. எனினும், செய்த பிழைகளைத் திருத்திக்கொண்டு எதிர்வரும் போட்டிகளில் அதிரடியாக விளையாடி, அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற எதிர்பார்த்துள்ளது.

அலோசிஸ் கல்லூரியின் முக்கிய வீரர்கள்

அணித்தலைவர் மற்றும் விளையாட்டு கழக வீரருமான நவிந்து நிர்மல் தன்னுடைய அனுபவங்களைப் பயன்படுத்தி தனது பங்களிப்பை வழங்கக் கூடியவர்.

கடந்த ஆண்டில் பருவப்போட்டிகளுக்காக மூன்று சதங்கள் உட்பட 936 ஓட்டங்களைப் பெற்றவரும், 19 வயதிற்குட்பட்ட இலங்கை  தேசிய அணியை பிரதிநிதிப்படுத்தும் வீரருமான அஷென் பண்டார இம்முறையும் அணியின் நடுத்தர வரிசை துடுப்பாட்டத்தை பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

4ஆம் வருட வீரர் ரவிந்து சஞ்சய ஆரம்பத் துடுப்பாட்டக்காரராக கடந்த வருடம் மொத்தமாக 678 ஓட்டங்களைப் பெற்று கொண்ட இவர், தனது துடுப்பாட்ட மட்டை மூலம் இம்முறையும் கூடிய ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுக்கலாம். அத்துடன், கடந்த ஆண்டு 12 விக்கெட்டுகளை வீழ்த்தியது போல், மறுபடியும் பந்து வீச்சில் அச்சுறுத்தலாம்.

3ஆம் ஆண்டு வீரரான, இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஹரீன் பூட்டில கடந்த பருவகால போட்டிகளில் 65 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். மேலும், 19ம் வயதிற்குட்பட்ட மாகாணங்களுக்கிடையிலான போட்டிகளில், சிறந்த பந்து வீச்சாளர் விருதினைப் பெற்று கொண்டார். இவருடைய நேர்த்தியான பந்து வீச்சு அணிக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Photo Album: St.Aloysius’ College Cricket Team Preview 2016/17

பயிற்றுவிப்பாளர்கள்

அலோசிஸ் கல்லூரி முன்னாள் பழைய மாணவர் மாலக்க டி சில்வா தொடர்ந்தும் முதல் பதினொருபேர் கொண்ட அணிக்கு பயிற்றுவிப்பாளராக இருக்கும் அதே சமயத்தில், கடந்த ஆண்டை விட  இம்முறை, வீரர்களின் திறமைகளை மேலும் வெளிக்கொண்டுவர எதிர்பார்த்துள்ளார். அத்துடன் தன்னுடைய பல வருட பயிற்சியாளர் அனுபவத்துடனும் கடந்த சில வருடங்களாக அதே அணியுடன் இருப்பதும் அனுகூலமாக இருக்கும். மேலும், குறை நிறைகளில் சிறிய மாற்றங்களுடன் அணியை முன்னெடுத்துச் செல்ல இலகுவானதாகவும் இருக்கிறது.

ஜகத் சேமாசிங்க தொடர்ந்தும் அலோசிஸ் கிரிக்கெட் அணியின் பொறுப்பாளராகவே கடமையாற்றுவார்.

இறுதிக் குறிப்பு

புனித அலோசியஸ் கல்லூரி, அதிகூடிய பங்களிப்பை தமது நட்சத்திர வீரரர்களான நவிந்து நிர்மல் மற்றும் அஷென் பண்டாரவிடம் எதிர்பார்க்கிறது. தங்களுடைய 19 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியின் அனுபவங்களை பயன்படுத்தி அணிக்கு வலு சேர்க்கும் அதே நேரத்தில் ரவிந்து சஞ்சன, ஹரீன் பூட்டில தம்முடைய அச்சுறுத்தலான பந்து வீச்சில் செல்வாக்கு செலுத்தி அணியை இம்முறை முன்னிலைப் படுத்தலாம்.