அணித் தலைவரின் சதம் கைகொடுக்க தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியினர் இலங்கை அபிவிருத்தி அணியினருக்கு மீண்டும் பதிலடி கொடுத்தனர்.
இலங்கை அபிவிருத்தி அணியினர் தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் சென்று விளையாடிக் கொண்டிருக்கும் முக்கோண சுற்றுப் போட்டித் தொடரின் 8ஆவது போட்டி நேற்று நடைபெற்றது. இலங்கை அபிவிருத்தி அணி, தென்னாபிரிக்க வளர்ந்து
வரும் அணி, தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணி ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முக்கோண சுற்றுப் போட்டி தொடரின் 8ஆவது போட்டியாக பிரிட்டோரிய மைதானத்தில் இலங்கை அபிவிருத்தி அணியினருக்கும் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியினருக்குமிடையில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அபிவிருத்தி அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடினர்.
இலங்கை அபிவிருத்தி அணியினர் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியினரின் பலத்த பந்துவீச்சை எதிர் கொண்டு 9 விக்கட்டுகளை இழந்து 242 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.
இலங்கை அபிவிருத்தி அணி சார்பாகத் துடுப்பாட்டத்தில் சந்தூண் வீரக்கொடியின் நிதானமான ஆட்டத்தினால் 106 பந்துகளை எதிர் கொண்டு 105 ஓட்டங்களை 2 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகள் உள்ளடங்கலாகக் குவித்தார்.
பாபசார வாதுக 32 ஓட்டங்களை 49 பந்துகளில் குவித்தார். தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி சார்பாகப் பந்துவீச்சில் டெசேப்போ நெடுலி 51 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுகளையும் வின்சென்ட் மூர் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளயும் கைப்பற்றினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியினர் 44.2 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 243 ஓட்டங்களைக் குவித்து தலைவரின் அதிரடி சதத்தின் மூலம் வெற்றியடைந்தனர்.
துடுபாட்டத்தில் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி சார்பாக மார்க்கிஸ் அக்கர்மன் அட்டமிழக்காமல் 126 ஓட்டங்களை 2 சிக்ஸர்கள் 10 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 107 பந்துகளிலும், ஜேசன் ஸ்மித் 44 ஓட்டங்களை 51 பந்துகளில் குவித்து அரைச்சதத்தை கைவிட்டார்.
இலங்கை அபிவிருத்தி அணி சார்பாகப் பந்துவீச்சில்ப்அமில அபோன்சோ 40 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளும் தனஞ்சய 67 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளும் பெற்றனர்.
போட்டியின் சாரம்சம்
இலங்கை அபிவிருத்தி அணி – 242/9 (50)
சந்தூண் வீரக்கொடி 106, பாபசார வாதுக 32, ஜெயசிங்கே 24டெசேப்போ நெடுலி 3/51, வின்சென்ட் மூர் 2/35, முலேலோ புதச 2/51
தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி – 243/7 (44.2)
மார்க்கிஸ் அக்கர்மன் 126*, ஜேசன் ஸ்மித் 44, போர்ன் போர்டுன் 33அமில அபோன்சோ 3/40, அகில தனஞ்சய 2/67, அணுக் பெர்னாண்டோ 1/43
தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியினர் 3 விக்கட்டுகளால் அபார வெற்றியடைந்து ஆட்ட நாயகனாக மார்க்கிஸ் அக்கர்மன் தெரிவு செய்யப்பட்டார்.