தெற்காசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர்களுக்கு கட்டுப்பாடு

86

நேபாளத்தில் இவ்வருட இறுதியில் இடம்பெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் நடைபெறவுள்ள ஒவ்வொரு போட்டிகளுக்கும் ஒரு நாட்டில் இருந்து ஒரு வீரரை மாத்திரம் பங்குபெறச் செய்வதற்கு போட்டி ஏற்பாட்டுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.  

மேல் மாகாண பாடசாலை மெய்வல்லுனர் சம்பியனாக புனித பேதுரு, நியூஸ்டீட் கல்லூரிகள்

சுகததாச அரங்கில் நடைபெற்ற மேல்….

கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவின் குவஹாத்தியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டியில் வரவேற்பு நாடான இந்தியா 28 தங்கப் பதக்கங்களை வெற்றி கொள்ள, இலங்கை அணி 9 தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டது

அதேபோல, இம்முறை போட்டிகளை நடாத்தவுள்ள நேபாளத்துக்கு மெய்வல்லுனரில் ஒரேயொரு வெண்கலப் பதக்கத்தினை மாத்திரமே வெற்றிகொள்ள முடிந்தது.  

எனவே, மெய்வல்லுனர் போட்டிகளுக்காக இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து தலா ஒவ்வொரு வீரர்கள் பங்குபற்றினால் நேபாளத்துக்கு குறைந்தபட்சம் ஒரு வெண்கலப் பதக்கத்தினையாவது வெற்றிகொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்புடன் போட்டி ஏற்பாட்டுக் குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது

இந்த தீர்மானத்தை போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் சாதாரண முடிவொன்றாக கருதினாலும், இலங்கை மெய்வல்லுனர்களுக்கு இது மிகப் பெரிய அநீதியை ஏற்படுத்தியுள்ளது.  

வழமையாக தெற்காசிய விளையாட்டு விழாவில் தான் இலங்கை மெய்வல்லுனர்கள் அதிகளவு பதக்கங்களை வென்று தமது ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர். ஆனால் இந்தமுறை அந்த வாய்ப்பை இலங்கை மெய்வல்லுனர்களுக்கு இழக்க வேண்டி ஏற்பட்டுள்ளது

அத்துடன், குறித்த தீர்மானத்தால் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனமும் மிகப் பெரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு திறமையான பல வீரர்கள் இருப்பதால், இலங்கை அணிக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வெல்வதற்கான வாய்ப்பு இருந்தது.  

அதேபோல, வளர்ந்துவரும் இளம் மெய்வல்லுனர் வீரர்களுக்கும் தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றி அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான அரிய வாய்ப்பொன்றும் காணப்பட்டது

இதுஇவ்வாறிருக்க, தெற்காசிய விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு போட்டிகளுக்கும் தலா இரண்டு வீரர்களை உள்ளடக்கிய ஒரு குழாத்தை அறிவிப்பதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளளம் தீர்மானித்திருந்தது

மேலும், அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர், தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான இறுதி தகுதிகாண் போட்டி எனவும் அறிவிக்கப்பட்டது

எனவே, இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் மிகவும் போட்டித் தன்மை மிக்கதாக இருக்கும் என மெய்வல்லுனர் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இதேவேளை, இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் மற்றும் சம்மெட்டி எறிதல் ஆகிய போட்டிகளை நீக்குவதற்கு போட்டி ஏற்பாட்டுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது

உலக மெய்வல்லுனர் சம்மேளனத்திற்கு புதிய பெயரும், குறியீடும்

உலக மெய்வல்லுனர் விளையாட்டின் தாய்….

இறுதியாக 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையின் கோலூன்றிப் பாய்தல் தேசிய சம்பியனான ஷா சந்தருவன் 4.90 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

தெற்காசிய விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண போட்டிகள் 1984ஆம் ஆண்டு நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்றது. அதன்பிறகு 1999ஆம் ஆண்டு குறித்த விளையாட்டு விழா நேபாளத்தில் நடைபெற்றிருந்ததுடன், தற்போது மூன்றாவது முறையாகவும் தெற்காசிய விளையாட்டு விழாவை நேபாளம் நடத்தவுள்ளமை சிறப்பம்சமாகும்

இதன்படி, இவ்வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை இவ்விளையாட்டு விழா நேபாள தலைநகர் கத்மண்டுவில் நடைபெறவுள்ளது. எனவே, 13ஆவது தடவையாக நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவுகள், நேபாளம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<