முதல் T20I போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு

Australia tour of Sri Lanka 2022

415

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் T20I போட்டிக்கான பதினொருவரை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் T20I போட்டி இன்று (06) இரவு கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>> பலமான ஆஸி. அணியை சொந்த மண்ணில் வீழ்த்துமா இலங்கை?

முதல் போட்டிக்கான பதினொருவரை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை நேற்றைய தினம் அறிவித்திருந்தது. இந்தநிலையில் இலங்கை அணி தங்களுடைய பதினொருவரை இன்றைய தினம் அறிவித்திருக்கிறது.

அணியில் 5 துடுப்பாட்ட வீரர்கள் 3 சகலதுறை வீரர்கள் மற்றும் 3 பந்துவீச்சாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக பெதும் நிஸ்ஸங்க மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதுடன், மூன்றாமிலக்க வீரராக சரித் அசலங்க பெயரிடப்பட்டுள்ளார்.

குசல் மெண்டிஸ் விக்கெட் காப்பாளராகவும், நான்காமிலக்க துடுப்பாட்ட வீரராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், பானுக ராஜபக்ஷ 5ம் இலக்க வீரராக இடம்பெற்றுள்ளார்.

இவர்களுடன் மூன்று சகலதுறை வீரர்களாக அணித்தலைவர் தசுன் ஷானக, வனிந்து ஹஸரங்க மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோரும் வேகப்பந்துவீச்சாளர்களாக நுவான் துஷார மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இதேவேளை வனிந்து ஹஸரங்கவுடன் முதன்முமை சுழல் பந்துவீச்சாளராக மஹீஷ் தீக்ஷன செயற்படவுள்ளார்.

முதல் போட்டிக்கான பதினொருவரில் எதிர்பார்க்கப்பட்ட மதீஷ பதிரணவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதுடன், சகலதுறை வீரர் லஹிரு மதுசங்கவும் அணியில் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் T20I போட்டிக்கான இலங்கை அணி

தனுஷ்க குணதிலக்க, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, தசுன் ஷானக, சாமிக்க கருணாரத்ன, வனிந்து ஹஸரங்க, துஷ்மந்த சமீர, மஹீஷ் தீக்ஷன, நுவான் துஷார

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<