கடவுளை நம்பி களத்தில் குதித்த இலங்கையின் எதிர்கால மிஸ்டர் கிரிக்கெட்

2252
(AFP/Getty Images)

2015 உலகக் கிண்ணத்திற்குப் பிறகு இலங்கை அணி வரலாற்றில் இல்லாதவாறு அடுத்தடுத்து பல தொடர்களில் நெருக்கடிகளையும், தோல்விகளையும் சந்தித்து தடுமாறி வந்தமை அனைவரும் அறிந்த விடயம்அதற்கான காரணங்களாக உள்ளூர் போட்டிகளில் காணப்படுகின்ற குறைபாடுகள், வீரர்களின் தொடர் உபாதைகள், உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படுகின்ற குறைபாடுகள் மற்றும் சிறந்த நிரந்தர பயிற்சியாளர் ஒருவர் இல்லாமை உள்ளிட்ட காரணங்களைக் குறிப்பிடலாம்.

[rev_slider LOLC]

இவற்றின் காரணமாக 2019 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு நேரடித் தகுதியினைப் பெற்றுக்கொள்வதற்காக இன்னுமொரு அணியில் தோல்விக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு வரலாற்றில் முதற்தடவையாக இலங்கை அணி தள்ளப்பட்டது.

ICC டெஸ்ட் தரவரிசையில் அதிரடி முன்னேற்றம் கண்ட ரொஷேன், அகில

சில்வாவின் பொறுப்பான ஆட்டத்தால் குறித்த டெஸ்டில் இலங்கை அணி 215..

எனவே, கடந்துபோன கசப்பான அனுபங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக முன்னாள் டெஸ்ட் வீரரான சந்திக ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டார். இதன்படி, இலங்கை அணியை இவ்வருடத்திலிருந்து முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த அவர், தற்போது பங்களாதேஷில் நடைபெற்றுவரும் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் முத்தரப்பு ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் ஆகியவற்றைக் கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாகவும் இருந்தார்.

அதேபோல தொடர் தோல்விகள் மற்றும் மோசமான விமர்சனங்களால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த இலங்கை அணியின் இளம் வீரர்கள் ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்காக முழு மூச்சுடன் செயற்பட்டு வருகின்றனர்.

இதில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த வாரம் நிறைவுக்கு வந்தது. இத்தொடரில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என சகலதுறைகளிலும் பிரகாசித்த இலங்கை அணி, 1-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி இவ்வருடத்தின் முதலாவது டெஸ்ட் வெற்றியையும் பதிவுசெய்தது.

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தைக் கொண்டதாக அமைந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்காக மத்திய வரிசை வீரராகக் களமிறங்கிய ரொஷேன் சில்வா இரண்டு இன்னிங்ஸ்களிலும் நிதானமாக துடுப்பெடுத்தாடி முறையே 56 மற்றும் 70 ஓட்டங்களைக் குவித்தார். வலதுகை துடுப்பாட்ட வீரரான இவர், முதல் டெஸ்ட்டில் கன்னிச் சதத்தையும், 2ஆவது டெஸ்ட்டில் தொடர்ச்சியாக 2 அரைச் சதங்களையும் பெற்று தொடரின் நாயகனாகவும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கையின் வெற்றியோட்டம் பங்களாதேஷுடனான T-20 போட்டிகளிலும் தொடருமா?

தாகத்தில் இருந்த ஒருவருக்கு நீர் ஊற்று ஒன்றினைக்..

இலங்கை டெஸ்ட் அணிக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை கொடுத்துள்ள ரொஷேன் சில்வாவின் ஆரம்ப காலம் கசப்பாகவும், கரடுமுரடாகவும் இருந்தாலும், தற்போது சுபீட்சமான எதிர்காலத்துக்கான வரத்தைப் பெற்றுக்கொண்ட வீரராக அவர் மாறியுள்ளார்.

கம்பஹா மாவட்டம் ராகமவைப் பிறப்பிடமாகக் கொண்ட ரொஷேன் சில்வா, தனது ஆரம்பக் கல்வியை ராகம பெசிலிகா கல்லூரியில் மேற்கொண்டார். சிறுவயது முதல் கிரிக்கெட் விளையாடுவதில் அதீத திறமையைக் கொண்டவராக விளங்கிய அவர், மேலதிக கிரிக்கெட் மற்றும் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்காக தனது பயிற்சியாளர் ஹர்சா டி சில்வாவின் முயற்சியினால் மருதானை புனித ஜோசப் கல்லூரியில் இணைந்துகொண்டார்.

அப்போதைய காலத்திலும் பாடசாலை கிரிக்கெட் அரங்கில் முன்னணி பாடசாலையாக விளங்கிய ஜோசப் கல்லூரியில் இருந்து தேசிய அணியில் இடம்பெற்ற அஞ்செலோ மெதிவ்ஸ், திமுத் கருணாரத்ன மற்றும் திசர பெரேரா ஆகியோருடன் விளையாடிய சக வீரராகவும் ரொஷேன் விளங்கினார். இளமை முதலே பிரகாசித்தமையினால், 19 வயதிக்குட்பட்ட இலங்கை அணிக்காகவும் அவர் விளையாடினார்.  

எனினும், 2006ஆம் ஆண்டு முதல் உள்ளூர் முதற்தரப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்த ரொஷேன் சில்வா, அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஒவ்வொரு பருவகாலத்திலும் தொடர்ச்சியாக ஓட்டங்களைக் குவித்து வந்த முதல் 3 வீரர்களிலும் இடம்பிடித்தார்.  

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுவதில் சந்தேகம்

2021 ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்..

எனவே குறுகிய காலப்பகுதியில் இலங்கையின் உள்ளூர் போட்டிகளில் ஓட்ட இயந்திரமாக விளங்கிய ரொஷேன், இதுவரை 111 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 53.98 என்ற சராசரியுடன் 7,052 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதன்படி, இலங்கை டெஸ்ட் அணிக்காக விளையாடுவதற்கு அனைத்து திறமைகளையும் பெற்றிருந்த ரொஷேனுக்கு, ஒருசில காரணங்களால் டெஸ்ட் அணியில் இடம்பெற முடியாது போனது.

எனினும், இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன, கடந்த 2 வருடங்களாக மேற்கொண்ட முயற்சியின் காரணமாக ரொஷேனுக்கு டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பு கடந்த வருடம் கிட்டியது. இதற்கு முக்கிய காரணமாக கடந்த வருடம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 3 போட்டிகளைக் கொண்ட உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் தொடரில் ரொஷேன் சில்வா சிறப்பாக விளையாடியதைக் குறிப்பிடலாம்.

அதேபோல இலங்கை அணியில் தற்போது விளையாடி வருகின்ற குசல் மெண்டிஸ் மற்றும் தனன்ஜய டி சில்வா போன்று ரொஷேன் சில்வா, இளமையான வீரர் அல்ல. ஆனால் இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஹஷான் திலகரத்ன மைதானத்தில் மிகவும் நிதானமாக விளையாடுவதைப் போல, எளிதில் விக்கெட்டினையும் பறிகொடுத்துவிடாமல் அவதானத்துடன் விளையாடுகின்ற வீரராவார். உண்மையில் மனதளவில் கடுமையான வீரராக அவர் இருந்தாலும், 3 வேளை உணவுக்குப் பிறகு மாட்டிறைச்சி சாப்பிடுகின்ற பழக்கத்தை கொண்டிருக்கின்ற காரணத்தால் உடல் ரீதியாக திடகாத்தரமிக்க வீரராகவும் அவர் இருந்து வருகின்றார்.  

இதன்படி, இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகத்தைப் பெற்று ஓட்டமெதனையும் பெற்றுக்கொள்ளாமல் ஆட்டமிழந்த ரொஷேன், 2ஆவது இன்னிங்ஸில் அஷ்வின், ஜடேஜா போன்ற உலகின் முன்னிலை பந்துவீச்சாளர்களின் அழுத்தங்ளுக்கு நிதானமாக முகங்கொடுத்து ஆட்டமிழக்காது 74 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டு, இலங்கை அணியை தோல்வியிலிருந்து மீட்டார்.  

இதனையடுத்து பங்களாதேஷ் அணிக்கெதிராக அண்மையில் நிறைவடைந்த டெஸ்ட் தொடரிலும் அபாரமாக விளையாடிய அவர், இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்தார்.

இதில், அடுத்தடுத்து 3 டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி 103.00 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் அருமையாக விளையாடிய ரொஷேன் சில்வா, உலக டெஸ்ட் வீரர்களின் வரிசையில் குறைந்த போட்டிகளில் அதிக துடுப்பாட்ட சராசரியைப் பெற்றுக்கொண்ட அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் டொன் பிரெட்மனை முந்தி 2ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

குறித்த பட்டியலில், பிரெட்மன் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 99.4 என்ற துடுப்பாட்ட சராசரியைப் பெற்றுள்ளார். தற்பொழுது 3 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள ரொஷேன் சில்வா, 103.00 என்ற சராசரியையும், மேற்கிந்திய தீவுகளின் ஆண்டி கவுண்டம், ஒரேயொரு டெஸ்ட்டில் மாத்திரம் விளையாடி 112.00 என்ற சராசரியையும் பெற்றுக்கொண்டு முதலிரண்டு இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், 5 இன்னிங்ஸ்களில் விளையாடி 74, 109, 56, 58 என 4 அரைச்சதங்களைக் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொண்ட முதல் இலங்கையராகவும் ரொஷேன் சில்வா வரலாற்றில் இடம்பிடித்தார்.   

அதுமாத்திரமின்றி, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் ரொஷேன் சில்வா 29 இடங்கள் முன்னேறி முதற்தடவையாக 49ஆவது இடத்தை பிடித்துக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T-20 தொடரினால் இலங்கைக்கு 100 கோடி ரூபா வருமானம்

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும்….

இந்நிலையில், பங்களாதேஷ் அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியின் பிறகு ரொஷேன் சில்வா ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில்,முதலில் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெறுவதற்கு உதவிய கடவுளுக்கு நன்றிக்ளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன், இத்தருணத்தில் வீட்டிலிருந்து என்னைப் பாரத்துக்கொண்டிருக்கின்ற எனது அன்பு மனைவியின் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வருவதையும் என்னால் உணர முடிகின்றது. இப்போட்டிக்காக எமக்கு வழங்கப்பட்ட ஆடுகளம் துடுப்பெடுத்தாடுவதற்கு கடினமாக இருந்தாலும், நான் எனது வழமையான ஆட்டத்தை மேற்கொண்டேன். ஆனால் ஏன் இவ்வாறானதொரு ஆடுகளத்தை எமக்கு தந்தார்கள் என்பது புரியாமல் உள்ளது.

பொதுவாக அவுஸ்திரேலியா போன்ற அணிகள் ஆசிய நாடுகளில் விளையாடும் போது நாம் இவ்வாறான ஆடுகளங்களையே தயாரிப்போம். ஆனால் எமது அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்களை பார்த்தால் இவ்வாறான ஆடுகளத்தை தயாரித்திருப்பது கேலிக்கையாக உள்ளது. அதுமாத்திரமின்றி இவ்வாறான ஆடுகளங்களில் சிறப்பாக விளையாட வேண்டுமானால் வீரர்கள் ஒவ்வொருவரும் தம்முடைய கடவுளை கட்டாயம் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.

”அதேபோல எமது துடுப்பாட்ட வரிசையில் உள்ள பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக விளையாடியிருந்தார்கள். இந்த ஆடுகளத்தில் 300 ஓட்டங்களுக்கு மேல் குவிப்பது இலகுவான விடயமல்ல. ஆனால் அவ்வாறு சொல்லி கிரிக்கெட் அதிஷ்டத்திற்குறிய விளையாட்டு என்பதை மறந்துவிடவும் கூடாது. எனவே, தொடர்ந்து இதேபோல சிறப்பாக விளையாடுவதற்கு கடவுளை பிரார்த்திக்கின்றேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

(AP Photo/A.M. Ahad)

இந்நிலையில், மிஸ்டர் கிரிக்கெட் என அழைக்கப்பட்ட அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மைக் ஹசி, தன்னுடைய 30ஆவது வயதில் டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டு 51.00 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் 6,000 டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்த வீரராகத் திகழ்ந்தார். இதேபோல, தன்னுடைய 29ஆவது வயதில் டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டுள்ள ரொஷேன் சில்வாவும், வெறுமனே 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 103.00 என்ற துடுப்பாட்ட சராசரியைப் பெற்றுக்கொண்டு முன்னிலை பெற்றிருக்கின்ற இத்தருணத்தில் இலங்கை அணியின் மிஸ்டர் கிரிக்கெட்டாக வருவதற்கான அனைத்து தகுதிகளும் ரொஷேனிடம் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சுமார் 10 வருடங்களாக அவுஸ்திரேலியாவின் முதல்தர கிரிக்கெட் தொடரான ஷெபில்ட் ஷில்ட் தொடரில் சிறப்பாக விளையாடி அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக இடம்பெற்றிருந்த மைக் ஹசி, தேசிய அணிக்குள் இடம்பெற்று 19 டெஸ்ட் சதங்களைப் பூர்த்தி செய்து சாதனையும் படைத்தார். அவரைப் போல இலங்கை கிரிக்கெட்டிலும் பிற்காலத்தில் தேசிய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொண்ட ரொஷேன் சில்வாவும், இலங்கை அணியின் மிஸ்டர் கிரிக்கெட்டாக ஜொலிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.   

அதுமாத்திரமின்றி ரொஷேன் சில்வா போன்ற திறமையும், தகுதியும் உடைய வீரர்களுக்கு மாத்திரம் அணியில் வாய்ப்புகளை வழங்கி, வீரர்களின் எண்ணிக்கையை குறைத்து, இலங்கை அணியின் வெற்றிக்காக கிரிக்கெட் நிர்வாகமும் தெரிவுக் குழுவினருர் நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் இலங்கை அணி அனைத்து வகைப் போட்டிகளிலும் முதல்நிலை அணியாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை இந்த தருணத்தில் சுட்டிக்காட்டுகிறோம்.