2027ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்து சம்பியன்ஷிப் மூன்றாம் சுற்று தகுதிகாண் தொடரில் சீனா தாய்பேய் (Chinese Taipei) அணியை எதிர்கொள்ளும் இலங்கை கால்பந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
>>தொடர்ச்சியாக 2ஆவது தடவையாக ஜனாதிபதி றக்பி கிண்ணத்தை வென்ற இஸிபத்தன கல்லூரி<<
சிரேஷ்ட கால்பந்து கோல் காப்பாளர் சுஜான் பெரேரா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் முதன் முறையாக ரெமியன் முத்துக்குமாரு இணைக்கப்பட்டுள்ளார். அதேநேரம், டில்லோன் டி சில்வா, ஸ்டீவன் சக்கயராட்ஜி ஆகியோர் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தாய்லாந்தில் பயிற்சிகளை ஆரம்பித்துள்ள இலங்கை கால்பந்து அணியானது, சீனா தாய்பேய் அணியை ஜூன் மாதம் 10ஆம் எதிர்கொள்ளவிருப்பதோடு, அதற்கு முன்னர் தாய்லாந்தில் வைத்து புரூணை தாருஸ்ஸலம் அணியுடன் ஜூன் மாதம் 10ஆம் திகதி நட்பு மோதல் ஒன்றில் பங்கேற்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கால்பந்து குழாம்
சுஜான் பெரேரா (தலைவர்), கரேட் கெல்லி, பாரத் சுரேஷ், அனுஜன் ராஜேந்திரம், ராகுல் சுரேஷ், ரேமியன் முத்துக்குமாரு, சாமுவேல் தூர்ரன்ட், ஜேசன் தயாபரன், வேட் டேக்கர், லியோன் பெரேரா, ஜேக் ஹிங்கெட், கிளடியோ கம்மர்நெக்ச்ட், மொஹமட் தில்ஹாம், மொஹமட் ஹஸ்மீர், பைசர் மொஹமட் அமான், சலன சமீர, கவீஷ் பெர்னாண்டோ, மொஹமட் முர்சித், ஸ்டீபன் சக்கராட்ஜி, வசீம் ராசிக், ஒலிவர் கெலார்ட், ஆதவன் ராஜமோஹன்
>>மேலும் கால்பந்து செய்திகளுக்கு<<