புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஐ.சி.சி. T20I வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் வீரர்கள் முன்னேற்றம் காண்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>ICC இடம் பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை நிராகரிப்பா?<<
ஐ.சி.சி. T20I வீரர்களுக்கான புதிய தரவரிசையினை நேற்று (17) வெளியிட்டிருந்தது. வெளியிடப்பட்டுள்ள புதிய T20I துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 7ஆம் இடத்தில் காணப்பட்டிருந்த பெதும் நிஸ்ஸங்க ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் பெற்ற இரண்டு தொடர் அரைச்சதங்களை அடுத்து 6ஆம் இடத்திற்கு முன்னேறியிருக்கின்றார். அதேவேளை குசல் பெரேரா 9ஆவது இடத்தில் நீடிக்கின்றார்.
T20I பந்துவீச்சாளர்கள் வரிசையில் புதிய முன்னேற்றமாக ஆறு இடங்கள் முன்னேறியிருக்கும் மாலிங்க பாணியில் பந்துவீசும், நுவான் துஷார 6ஆம் இடத்தில் காணப்படுகின்றார். அதேவேளை நட்சத்திர வீரரான வனிந்து ஹஸரங்க 7ஆம் இடத்தில் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>முன்னணி வேகப்பந்துவீச்சாளரை இழக்கும் ஆப்கானிஸ்தான்<<
புதிய T20I சகலதுறைவீரர்கள் வரிசையில், வனிந்து மாத்திரமே முதல் 10 இடங்களுக்குள் உள்ள இலங்கை வீரராக காணப்படுவதோடு அவர் 8ஆவது இடத்தினை தக்க வைத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
மறுமுனையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான அபிஷேக் ஷர்மா, வருண் சக்கரவர்த்தி, ஹார்திக் பாண்டியா ஆகியோர் முறையே புதிய T20I துடுப்பாட்டவீரர்கள், பந்துவீச்சாளர்கள், சகலதுறைவீரர்கள் தரவரிசைகளில் முதல் இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<