அபு தாபி T10 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்

Abu Dhabi T10 league -2025-26

44
Abu Dhabi T10 league -2025-26

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள அபு தாபி T10 தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இலங்கை வீரர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி நேற்றைய தினம் (16) இலங்கை அணியைச் சேர்ந்த 6 வீரர்கள் அபு தாபி T10 தொடருக்கான அணிகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

>>லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் புதிய ஆலோசகராக கேன் வில்லியம்சன்<<

இதில் இலங்கை அணியின் அனுபவ வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் ரோயல் சேம்ப்ஷ் அணிக்காவும், ஓய்வுபெற்ற திசர பெரேரா நொர்தென் வொரியர்ஸ் அணிக்காவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம் அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் எஸ்பின் ஸ்டாலியன்ஸ் அணிக்காகவும், பானுக ராஜபக்ஷ புதிய அணியான விஸ்டா ரைடர்ஸ் அணியிலும், நிரோஷன் டிக்வெல்ல ரோயல் சேம்ப்ஷ் அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

எட்டு அணிகள் பங்கேற்கக்கூடிய அபு தாபி T10 தொடர் அடுத்த மாதம் 18 முதல் 30ஆம் திகதிவரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<