உலக அஞ்சலோட்டத்தில் பங்கேற்கும் இலங்கை அணி

World Relay Championship 2025

11
Sri Lankan Mix Relay team leaves for China

சீனாவின் குவாங்சோவில் இம்மாதம் நடைபெறவுள்ள உலக அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பில் 4400 கலப்பு அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி பங்குபற்றவுள்ளது.

7ஆவது உலக அஞ்சலோட்ட சம்பியன்ஷிப் தொடர் இம்மாதம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் சீனாவின் குவாங்சோவில் உள்ள குவாங்டோங் ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இம்முறை உலக அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பில் 4400 கலப்பு அஞ்சலோட்டப் போட்டிக்காக இலங்கை அணி தகுதிபெற்ற நிலையில், அதற்கான இலங்கை வீரர்கள் விபரத்தை இலங்கை மெய்வல்லுனர் சங்கம் அண்மையில் வெளியிடப்பட்டது.

அதன்படி, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அருண தர்ஷன, காலிங்க குமாரகே, ஹர்ஷனி பெர்னாண்டோ, லக்ஷிமா மென்டிஸ், நதீஷா ராமநாயக்க மற்றும் சதேவ் ராஜகருணா ஆகியோர் போட்டியிடவுள்ளனர். அதேபோல, இப்போட்டித் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் பயிற்சியாளராக டபிள்யூ.ஜி.எம் துஷார செயல்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக அஞ்சலோட்டப் சம்பியன்ஷிப்பில் அனைத்து அணிகளும் வெளிப்படுத்தும் செயல்திறனின் அடிப்படையில் முதல் 14 இடங்களைப் பிடிக்கும் அணிகள், ஜப்பானில் நடைபெறும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெறும். அடுத்த உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் ஜப்பானின் டோக்கியோவில் செப்டம்பர் மாதம் 13 முதல் 21 வரை நடைபெற உள்ளன.

இதேவேளை, இம்மாhதம் 27 முதல் 31ஆம் திகதி வரை தென் கொரியாவின் குமி நகரில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கையைச் சேர்ந்த நான்கு அஞ்சலோட்ட அணிகள் பங்குபற்றவுள்ளது. அதன்படி, ஆண்கள், பெண்களுக்கான 4400 மீற்றர் அஞ்சலோட்டம், 4400 மீற்றர் கலப்பு அஞ்சலோட்டத்துக்கு மேலதிகலாக, ஆண்கள் 4100 மீட்டர் அஞ்சலோட்ட அணியும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, உலக அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பில் பங்கேற்கவுள்ள 4400 கலப்பு அஞ்சலோட்ட இலங்கை அணி இன்று (08) மாலை சீனா நோக்கி புறப்பட்டுச் சென்றது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<