சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் முன்னேற்றம் காண்பித்துள்ளனர்.
ஆகாஸின் சுழலின் உதவியுடன் இலங்கை இளையோர் அணிக்கு வெற்றி
ஜிம்பாப்வே – இலங்கை அணிகள் இடையில் சென்ற வாரம் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில், திறமையாக செயற்பட்டிருந்த இலங்கை அணியின் முன்வரிசை வீரரான பெதும் நிஸ்ஸங்க 07 இடங்கள் முன்னேறி தற்போது 13ஆவது இடத்தில் காணப்படுகின்றார்.
பெதும் நிஸ்ஸங்க ஜிம்பாப்வே ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அரைச்சதம் விளாசியதோடு, இரண்டாவது போட்டியில் சதம் விளாசி இலங்கை ஒருநாள் தொடரினை 2-0 எனக் கைப்பற்ற உதவியமை குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் ஜிம்பாப்வே தொடரில் ஜொலித்திருந்த மற்றுமொரு வீரரான ஜனித் லியனகே 13 இடங்கள் முன்னேறி தற்போது 29ஆவது இடத்தில் காணப்படுகின்றார். அதேவேளை ஏனைய இலங்கை வீரர்களில் குசல் மெண்டிஸ் 12ஆவது இடத்திலும், இலங்கை அணித்தலைவர் 6ஆவது இடத்திலும் காணப்படுகின்றனர்.
இதேவேளை ஒருநாள் அணிகள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இந்திய அணியின் முன்வரிசைத் துடுப்பாட்டவீரர், சுப்மான் கில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<