இந்திய மகளிர் அணிக்கு எதிராக சிலாபம் மேரியன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவதும், இறுதியுமான T20 போட்டியிலும் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி, தொடரை 0-4 என முழுமையாக இழந்துள்ளது.
இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா
இலங்கை மகளிர் மற்றும் இந்திய மகளிர்..
இலங்கை மகளிர் மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடர் நடைபெற்று வந்தது. தொடரின் இரண்டாவது T20 போட்டி மாத்திரம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், ஏனைய நான்கு போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.
இந்த தொடரில் பந்து வீச்சில் இலங்கை அணி சற்று முன்னேற்றத்தைக் கண்டிருந்த போதும், துடுப்பாட்டத்தில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை விட்டுக் கொடுத்திருந்ததன் காரணமாகவே தோல்விகளை சந்திக்க நேரிட்டுள்ளது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த இலங்கை மகளிர் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
T20 தொடரின் கடந்த மூன்று போட்டிகளில், வெற்றியிலக்கினை நோக்கி போராடிய இலங்கை அணி முதலாவது போட்டியில், இந்திய அணிக்கு நெருக்கடிக் கொடுத்து தோல்வியடைந்திருந்தது. இந்த நம்பிக்கையுடன் இன்றைய போட்டியில் எதிரணிக்கு சவால் கொடுக்கும் நோக்கில் இலங்கை களமிறங்கியது.
Photos : Sri Lanka Women vs India Women – 4th T20
Photos of Sri Lanka Women vs India Women – 4th T20…
முழுத் தொடரையும் பொருத்தவரையில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளின் விக்கெட்டுகளை இலங்கை அணி கைப்பற்றி, மத்தியவரிசை வீராங்கனைகளின் விக்கெட்டுகளை கைப்பற்ற தடுமாறி வந்தது. இதே நிலைதான் இன்றும் தொடர்ந்தது. மிதாலி ராஜ் மற்றும் ஸ்ம்ரிட் மந்தனா ஆகியோரின் விக்கெட்டுகளை குறைந்த ஓட்டங்களுக்கு வீழ்த்திய இலங்கை அணி, ஜெமிமாஹ் ரொட்ரிகஸ் மற்றும் அணித் தலைவி ஹர்மன்ப்ரீட் கஹுர் ஆகியோருக்கு ஓட்டங்களை வாரிக்கொடுத்தது.
குறித்த இருவரும் அதிரடியாக ஆடியதுடன் ஜெமிமாஹ் ரொட்ரிகஸ் 46 ஓட்டங்களையும், ஹர்மன்ப்ரீட் கஹுர் 63 ஓட்டங்களையும் விளாசினர். பின்னர், அணியின் ஏனைய வீராங்கனைகள் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் வெளியேற்றப்பட்டனர். இதன்மூலம் மிகப்பெரிய இலக்கை நோக்கி நகர்ந்த இந்திய மகளிர் அணி, தொடர்ச்சியான விக்கெட்டுகள் இழப்பால் 18.3 ஓவர்களில் 156 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பந்து வீச்சில் இனோசி பிரியதர்சனி தனது சிறப்பான பந்து வீச்சு பிரதியை இன்று பதிவுசெய்து 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சஷிகலா சிறிவர்தன 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
T10 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது
ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடர்ந்தும் இரண்டாவது…
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி வழமைப்போல ஓரிரு வீராங்கனைகளின் துடுப்பாட்ட வெளிப்படுத்தல்களுடன் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒசாதி ரணசிங்க, சஷிகலா சிறிவர்தன மற்றும் அனுஷ்கா சஞ்சீவினி ஆகியோர் மாத்திரம் 20 ஓட்டங்களை கடக்க, ஏனைய வீராங்கனைகள் மோசமான துடுப்பாட்டத்த்தை வெளிப்படுத்தியிருந்தனர். இதனால் இலங்கை மகளிர் அணி 17.4 ஓவர்களில் 105 ஓட்டங்களுக்கு சுருண்டு, 51 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
அனுஷ்கா சஞ்சீவினி 29 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, ஒசாதி ரணசிங்க, சஷிகலா சிறிவர்தன ஆகியோர் தலா 22 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். இந்திய அணியின் பந்து வீச்சை பொருத்தவரையில், பூனம் யாதவ் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்த, தீப்தி சர்மா மற்றும் ராதா யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.
இதன்படி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி, ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியதுடன், T20 தொடரை 4-0 என கைப்பற்றி, தொடர் வெற்றிகளுடன் நாடு திரும்புவுள்ளது.
போட்டி சுருக்கம்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<




















