இந்திய மகளிர் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20I கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தின் தலைவியாக தொடர்ந்தும் சமரி அத்தபத்து செயற்படவுள்ளதுடன், உதவி தலைவியாக ஹர்ஷிதா சமரவிக்ரம பெயரிப்பட்டுள்ளார்.
டிசம்பர் 21, 23, 26, 28 மற்றும் 30 ஆகிய திகதிகளில் ஐந்து T20I சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளன. மகளிர் கிரிக்கெட்டில் வலிமையான அணிகளில் ஒன்றான இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது இலங்கை மகளிர் அணிக்கு மிகவும் பயனுள்ள அனுபவமாக அமையும்.
இதனிடையே, இலங்கை மகளிர் அணி டிசம்பர் 17ஆம் திகதி இந்தியா புறப்பட உள்ளது.
T20I தொடருக்கான இலங்கை மகளிர் குழாம் விபரம்:
சமரி அத்தபத்து (அணித் தலைவி), ஹர்ஷிதா சமரவிக்ரம (உதவி தலைவி), ஹசினி பெரேரா, நிலக்ஷிகா டி சில்வா, கவிஷா தில்ஹாரி, இமேஷா துலானி, கௌஷினி நுத்யங்கனா, மல்ஷா ஷெஹானி, இனோகா ரணவீர, ஷஷினி கிம்ஹானி, நிமேஷா மதுஷானி, கவ்யா காவிந்தி, ரஷ்மிகா செவ்வந்தி, மல்கி மதாரா
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















