இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கண்டி- பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 3-0 என தொடரை கைப்பற்றியுள்ளது.
அடுத்த ஆட்டத்திலாவது இலங்கைக்கு முதல் வெற்றியை சுவைக்கலாமா?
இலங்கை அணிக்கு எதிரான மழையால் பாதிக்கப்பட்ட மூன்று ஒருநாள்…
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தசுன் சானக மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 273 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டிக்வெல்ல இன்றைய தினம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் . சக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சதீர சமரவிக்ரம ஆட்டமிழந்தாலும் அணித் தலைவருடன் இணைந்து சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தார். இவர் அணிக்காக 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இவருக்கு அடுத்தப்படியாக ஓரளவு பங்களிப்பை வழங்கிய தினேஷ் சந்திமால்33 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததுடன், மீண்டும் ஏமாற்றிய குசால் மெண்டிஸ் 5 ஓட்டங்களுடனும், தனன்ஜய டி சில்வா 17 ஓட்டங்களுடனும்ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய தசுன் சானக, திசர பெரேரா மற்றும் அகில தனன்ஜய ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். அரைசதத்தைக் கடந்த தசுன் சானக 66 ஓட்டங்களையும், திசர பெரேரா 44 ஓட்டங்களையும் பெற, அகில தனன்ஜய ஆட்டமிழக்காமல் 33* ஓட்டங்களை பெற்றார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை மொஹீன் அலி 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
துடுப்பாட்ட வீரர்களின் கவனக் குறைவால் இலங்கை அணிக்கு மீண்டும் தோல்வி
இலங்கை அணிக்கு எதிராக கண்டி – பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற…
இலங்கை அணி நிர்ணயித்த 274 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 27 ஓவர்களில் 2 விக்கட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டதால் டக்வர்த் லூவிஸ் முறைப்படி அந்த அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.
இங்கிலாந்து அணியின் ஆரம்பம் சிறப்பாக இருந்தது. முதல் விக்கெட்டுக்காக 52 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெறப்பட்டிருந்தது. எனினும் அகில தனன்ஜயவின் பந்துவீச்சில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் 45 ஓட்டங்களை பெற்றிருந்த ஜேசன் ரோய் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
எவ்வாறாயினும் இந்த ஒருநாள் போட்டித் தொடரை பொருத்தவரை சிறந்த துடுப்பாட்ட உத்வேகத்துடன் உள்ள அணித் தலைவர் இயன் மோர்கன் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் நேர்த்தியான முறையில் துடுப்பெடுத்தாடினர். இதன்படி இங்கிலாந்து அணி 27 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்றிருந்த போது போட்டியில் மழைக் குறுக்கிட்டது. போட்டியில் தொடர்ந்தும் மழைக் குறுக்கிட்டதால் டக்வர்த் லூவிஸ் முறைப்படி 18 ஓட்டங்களால் இங்கிலாந்து அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.
தென்னாபிரிக்க உள்ளூர் T20 தொடரில் விளையாடவுள்ள ஜீவன் மெண்டிஸ்
ஐ.பி.எல். போட்டிகளை ஒத்தவிதத்தில் தென்னாபிரிக்க கிரிக்கெட்…
இதனடிப்படையில் இங்கிலாந்து அணி 3-0 என தொடரை கைப்பற்றியுள்ளதுடன், இலங்கை அணி மற்றுமொரு ஒருநாள் தொடர் தோல்விக்கு முகங்கொடுத்துள்ளது. ஐசிசி சம்பியன் கிண்ணத்தை தொடர்ந்து இலங்கை அணி இதுவரையில் (ஆசிய கிண்ணம் உட்பட) 8 தொடர்களில் விளையாடி, 7 தொடர்களில் தோல்வியை சந்தித்துள்ளது.
அதுமாத்திரமின்றி, இவ்வருடம் விளையாடிய 16 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி பெற்ற 10வது தோல்வியாகவும் இந்த போட்டி அமைந்துள்ளது. இதேவேளை இரண்டு அணிகளுக்கும் இடையிலான இறுதி ஒருநாள் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டி சுருக்கம்