கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 327 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளதுடன், இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 53 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
Photos: Sri Lanka Vs. England | 3rd Test | Day 3
ThePapare.com | Viraj Kothalawala | 25/11/2018 Editing and re-using images without….
நேற்றைய (24) ஆட்ட நேர முடிவில் 3 ஓட்டங்களுடன் ஆட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, இன்று எவ்வித ஓட்டங்களும் பெறாத நிலையில் தங்களுடைய முதல் விக்கெட்டை இழந்தது. கீடொன் ஜென்னிங்ஸ் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரோரி பேர்ன்ஸ் 7 ஓட்டங்களுடன் டில்ருவான் பெரேராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து துடுப்பாடக் களமிறங்கிய ஜொனி பெயார்ஸ்டோவ் மற்றும் ஜோ ரூட் ஆகியோரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற இங்கிலாந்து அணி 39 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் இதனையடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இவர்களின் இணைப்பாட்டத்துடன் இங்கிலாந்து அணி மதிய போசண இடைவேளையின் போது, 4 விக்கெட்டுகளை இழந்து 110 ஓட்டங்களை பெற்றது.
மதிய போசண இடைவேளைக்கு பின்னர் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் அரைச்சத இணைப்பாட்டத்தை கடந்தனர். இருவரும் 89 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் 42 ஓட்டங்களுடன் டில்ருவான் பெரேராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து, அரைச்சதம் கடந்த ஜோஸ் பட்லர் 64 ஓட்டங்களுடனும், மொயீன் அலி 22 ஓட்டங்களுடன் வெளியேறினர்.
பெயார்ஸ்டோவின் சதத்தின் பின் இங்கிலாந்தை கட்டுப்படுத்திய சந்தகன்
கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும்….
எனினும் இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆதில் ரஷீட் மற்றும் பென் போக்ஸ் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தேநீர் இடைவேளைக்கு முன்னர் இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 7 விக்கெட் இழப்பிற்கு 210 ஆக உயர்த்தினர்.
பின்னர், தேநீர் இடைவேளையை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் மிகுதி மூன்று விக்கெட்டுகளும் குறைந்த ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட 230 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய பென் போக்ஸ் 36 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 8 ஆவது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய டில்ருவான் பெரேரா 88 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், மலிந்த புஷ்பகுமார 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்நிலையில், 327 ஓட்டங்கள் என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்திலிருந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது. தனுஷ்க குணதிலக 6 ஓட்டங்களுடன் மொயீன் அலியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்ததுடன், தனன்ஜய டி சில்வா (0) மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோரை ஜெக் லீச் வெளியேற்றினார்.
திமுத், தனன்ஜயவின் அரைச்சதங்கள் வீண்; குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை
கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று வரும் சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான….
தொடர்ச்சியாக அஞ்செலோ மெதிவ்ஸும் 5 ஓட்டங்களுடன் பென் ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க இலங்கை அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 53 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 15 ஓட்டங்களுடனும் லக்ஷான் சந்தகன் ஒரு ஓட்டத்துடனும் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து அணி சார்பில் மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும், ஜெக் லீச் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இதேவேளை இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமாயின் மேலும் 274 ஓட்டங்களை பெறவேண்டும்.
ஸ்கோர் விபரம்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















