மூன்று அரைச்சதங்களுடன் இங்கிலாந்தின் ஓட்ட எண்ணிக்கையை முந்திய இலங்கை

1646

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தங்களது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி,  ரொஷேன் சில்வா, தனன்ஜய டி சில்வா மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் 336 ஓட்டங்களை குவித்துள்ளது.

சுழற்பந்து மூலம் இங்கிலாந்துக்கு சவால் விடுத்த இலங்கை

இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி – பல்லேகலை

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டிபல்லேகலை மைதானத்தில் நேற்று (14) ஆரம்பமாகியது. நேற்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 285 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இலங்கை அணி 26 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதன்படி, இன்றைய தினம் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி மேலதிகமாக 5 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தங்களுடைய இரண்டாவது விக்கெட்டை இழந்தது.

நேற்றைய தினத்தில் தற்காப்பு துடுப்பாட்ட வீரராக (Night Watchman) வரவழைக்கப்பட்ட மலிந்த புஷ்பகுமார 6 ஓட்டங்களுடன், மொயீன் அலியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரது ஆட்டமிழப்பை தொடர்ந்து, இலங்கை அணிக்கு தேவையான இணைப்பாட்டத்தினை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன மற்றும் தனன்ஜய டி சில்வா ஜோடி பெற்றுக்கொடுத்தது.

திமுத் கருணாரத்ன தனது 18வது டெஸ்ட் அரைச்சதத்தை பூர்த்திசெய்ய, மறுமுனையில் தனன்ஜய டி சில்வா சிறந்த பங்களிப்பை வழங்கினார். இருவரும் இணைந்து 96 ஓட்டங்களை பெற்றிருந்த போது, துரதிஷ்டவசமாக திமுத் கருணாரத்ன (63) ரன்அவுட் மூலம் ஆட்டமிழந்தார். இவரது ஆட்டமிழப்பின் பின்னர் தனன்ஜய டி சில்வா தனது 4வது டெஸ்ட் அரைச்சதத்தை கடக்க, புதிதாக களம் நுழைந்த குசால் மெண்டிஸ் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றமளித்தார்.

Photo: Sri Lanka vs England | 2nd Test – Day 01

ThePapare.com | Waruna Lakmal | 13/11/2018 Editing and re-using images without permission of ThePapare.com will be

இன்றைய உணவு இடைவேளைக்குள் மேலதிகமாக 3 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 113 ஓட்டங்களை பெற்றதுடன், மொத்தமாக 139 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

உணவு இடைவேளையை தொடர்ந்து போட்டி ஆரம்பித்த சிறிது நேரத்தில், அரைச்சதம் கடந்திருந்த தனன்ஜய டி சில்வா (59) மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் (20) ஆகியோரை ஆதில் ரஷீட் தனது சுழற்பந்து வீச்சின் மூலம் வழியனுப்பி வைத்தார். இவர்களின் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட, அடுத்து ஜோடி சேர்ந்த ரொஷேன் சில்வா மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஜோடி 46 ஓட்டங்களை பகிர்ந்துக்கொள்ள இலங்கை அணி 200 ஓட்டங்களைத் தொட்டது.

எனினும், நிதானமாக ஓட்டங்களை சேர்த்து வந்த நிரோஷன் டிக்வெல்ல 26 ஓட்டங்களை பெற்று, ஜோ ரூட்டின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, டில்ருவான் பெரேராவுடன் இணைந்து ரொஷேன் சில்வா தேநீர் இடைவேளையின் போது அணியின் ஓட்ட எண்ணிக்கையை 244 ஆக (7 விக்கெட்டுகள்) உயர்த்தினார்.

தேநீர் இடைவேளைக்கு பின்னர், டில்ருவான் பெரேரா 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும், அடுத்து களமிறங்கிய அகில தனன்ஜய 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இலங்கை அணி இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை கடந்தது. இறுதியாக சுராங்க லக்மாலுடன் இணைந்து 28 ஓட்டங்களை பகிர்ந்த ரொஷேன் சில்வா, துரதிஷ்டவசமாக சதமடிக்க தவறினார். இவர் 85 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, ஆதில் ரஷீட்டின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

முதல் வெற்றியுடன் அரையிறுதிக்கான எதிர்பார்ப்பை நீடித்துள்ள இலங்கை மகளிர் அணி

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் ஆறாவது மகளிர் T20I உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இன்று (15)

இவ்வாறு திமுத் கருணாரத்ன, தனன்ஜய டி சில்வா மற்றும் ரொஷேன் சில்வா ஆகியோர் அரைச்சதங்களை கடந்து அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்க்க, இலங்கை அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்களை குவித்தது. இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை பொருத்தவரை ஜெக் லீச் மற்றும் ஆதில் ரஷீட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், மொயீன் அலி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் பின்னர், தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, ஆட்டநேர முடிவில் ஒரு ஓவர் துடுப்பெடுத்தாடி, ஓட்டமெதனையும் பெற்றிருக்கவில்லை.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 285 ஓட்டங்களை பெற்றிருந்த போதும், இன்றைய தினம் அந்த அணிக்கு மேலதிகமாக 5 ஓட்டங்கள் நடுவர்களால் வழங்கப்பட்டது. இதன்மூலம் இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை 290ஆக அதிகரிக்கப்பட்டது. இலங்கை அணியின் ரொஷேன் சில்வா ஓட்டமொன்றை ஓடி முடிக்காமல் பாதியில் திரும்பியிருந்த (Short Run) குற்றத்துக்காகவே இந்த மேலதிகமாக ஓட்டங்கள் வழங்கப்பட்டது. எவ்வாறாயினும், இலங்கை அணியானது, இங்கிலாந்து அணியை விட 46 ஓட்டங்களால் முன்னிலையில் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

போட்டி சுருக்கம்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க