மெண்டிஸின் அதிரடியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை வளர்ந்து வரும் அணி

1740

பங்களாதேஷ் அணிக்கு எதிரான வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில், கமிந்து மெண்டிஸின் அதிரடியுடன் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை அணி  இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

த்ரில்லர் வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் தமது…

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று (13) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், பங்களாதேஷ் அணி நிர்ணயித்திருந்த 238 என்ற இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி 48.2 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை வளர்ந்து வரும் அணியின் தலைவர் சம்மு அசான், களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார். இதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் வளர்ந்து வரும் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மிஷனூர் ரஹ்மான் மற்றும் மத்தியவரிசை வீரர் யசீர் அலி ஆகியோர் அரைச்சதங்களை விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்த்தனர்

மிஷனூர் ரஹ்மான் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 72 ஓட்டங்களையும், யசீர் அலி ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பங்களாதேஷ் இளையோர் அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 237 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

யசீர் அலி  மற்றும் மிஷனூர் ரஹ்மான் ஆகிய இருவருக்கும் அடுத்தப்படியாக மொஷ்டாக் ஹுசைன் 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இலங்கை அணி சார்பில் சாமிக கருணாரத்ன 4 விக்கெட்டுகளையும், அஷித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Photos : Sri Lanka vs Bangladesh – ACC Emerging Asia Cup 2018

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி, 87 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், இதன் பின்னர் களம் நுழைந்த இளம் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் மற்றும் செஹான் ஜயசூரிய ஆகியோர் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். எனினும், செஹான் ஜயசூரிய களத்தடுப்பாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட காரணத்தினால் 39 ஓட்டங்களுடன் (obs) ஆட்டமிழந்தார்.

எவ்வாறாயினும், இறுதிவரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 88 பந்துகளில் 91 ஓட்டங்களை (9 பௌண்டரிகள்) பெற்றுக்கொடுத்தார். இவரைத் தவிர ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சந்துன் வீரக்கொடி 37 பந்துகளில் 47 ஓட்டங்களையும், அசேல குணரத்ன 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.  பந்துவீச்சில் சொரிபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Photos : India vs Pakistan | ACC Emerging Asia Cup 2018 | Semi Final

இதேவேளை, பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய இளையோர் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன்படி இலங்கைஇந்திய இளையோர் அணிகள் எதிர்வரும் 15ம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

போட்டி சுருக்கம்