2025 ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் சுப்பர் 4 போட்டியில், பங்களாதேஷ் இலங்கை அணியினை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.
>>மனுதி தலைமையிலான இலங்கை 19 வயதின்கீழ் மகளிர் அணி அறிவிப்பு
துபாயில் முன்னதாக இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் 4 போட்டி முன்னதாக ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் வீரர்கள் இலங்கையினை முதலில் துடுப்பாடப் பணித்தனர்.
முதலில் துடுப்பாடிய இலங்கை அணிக்கு பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் ஜோடி சிறந்த ஆரம்பத்தினை வழங்கியது. எனினும் ஆரம்ப வீரர்கள் இருவரினதும் விக்கெட்டுக்களின் பின்னர் இலங்கை அணிக்கு சரிவு ஏற்பட்டது.
ஆனால் மத்திய வரிசையில் களம் வந்த தசுன் ஷானக்க அசத்தல் அதிரடியினை வெளிப்படுத்த இலங்கை 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்கள் எடுத்துக் கொண்டது.
இலங்கை துடுப்பாட்டம் சார்பில் தசுன் ஷானக்க தன்னுடைய 6ஆவது T20I அரைச்சதத்தோடு ஆட்டமிழக்காது 37 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்கள் பெற்றார். மறுமனையில் குசல் மெண்டிஸ் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பெளண்டரி அடங்கலாக 34 ஓட்டங்களை எடுத்தார்.
>>இந்திய அணிக்காக மீண்டும் ஆடவுள்ள அஸ்வின்
பங்களாதேஷ் பந்துவீச்சின் சார்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மஹேதி ஹஸன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 169 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணிக்கு சிறு தடுமாற்றம் ஏற்பட்ட போதும், ஆரம்ப வீரர்களில் ஒருவரான சயீப் ஹசன் சிறந்த முறையில் துடுப்பாடி அரைச்சதம் பெற்றுக் கொடுத்தார்.
அதன் பின்னர் தவ்ஹித் ரிதோயின் நிதான ஆட்டமும் கைகொடுக்க பங்களாதேஷ் அணியானது போட்டியின் வெற்றி இலக்கினை 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களுடன் அடைந்து கொண்டது.
பங்களாதேஷ் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் சயீப் ஹஸன் 45 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்கள் எடுக்க, தவ்ஹித் ரிதோய் 37 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்கள் பெற்றார்.
போட்டியின் இறுதிவரை பங்களாதேஷ் அணிக்கு நெருக்கடி வழங்கிய இலங்கை பந்துவீச்சில் தசுன் ஷானக்க மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் சாய்த்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி மூலம் இந்த ஆசியக் கிண்ணத் தொடரில் இம்முறை தமது முதல் தோல்வியினைத் சந்தித்துள்ள இலங்கை அணியானது அடுத்த போட்டியில், செவ்வாய்க்கிழமை (23) பாகிஸ்தானை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Saif Hassan b Taskin Ahamed | 22 | 15 | 0 | 0 | 146.67 |
Kusal Mendis | c Saif Hassan b Mehidy Hasan Miraz | 34 | 25 | 0 | 0 | 136.00 |
Kamil Mishara | b Mahedi Hasan | 5 | 11 | 0 | 0 | 45.45 |
Kusal Perera | c Liton Das b Mustafizur Rahman | 16 | 16 | 0 | 0 | 100.00 |
Dasun Shanaka | not out | 64 | 37 | 0 | 0 | 172.97 |
Charith Asalanka | run out (Liton Das) | 21 | 12 | 0 | 0 | 175.00 |
Kamindu Mendis | c Liton Das b Mustafizur Rahman | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Wanindu Hasaranga | c Tanzid Hasan b Mustafizur Rahman | 2 | 2 | 0 | 0 | 100.00 |
Dunith Wellalage | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 3 (b 0 , lb 1 , nb 0, w 2, pen 0) |
Total | 168/7 (20 Overs, RR: 8.4) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Shoriful Islam | 4 | 0 | 49 | 0 | 12.25 | |
Nasum Ahmed | 4 | 0 | 36 | 0 | 9.00 | |
Taskin Ahamed | 4 | 0 | 37 | 1 | 9.25 | |
Mahedi Hasan | 4 | 0 | 25 | 2 | 6.25 | |
Mustafizur Rahman | 4 | 0 | 20 | 3 | 5.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Saif Hassan | c Dunith Wellalage b Wanindu Hasaranga | 61 | 45 | 0 | 0 | 135.56 |
Tanzid Hasan | b Nuwan Thushara | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Liton Das | c Pathum Nissanka b Wanindu Hasaranga | 23 | 16 | 0 | 0 | 143.75 |
Towhid Hridoy | lbw b Dushmantha Chameera | 58 | 37 | 0 | 0 | 156.76 |
Shamim Hossain | not out | 14 | 12 | 0 | 0 | 116.67 |
Jaker Ali | b Dasun Shanaka | 9 | 4 | 0 | 0 | 225.00 |
Mahedi Hasan | c Kusal Mendis b Dasun Shanaka | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Nasum Ahmed | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 3 (b 0 , lb 0 , nb 0, w 3, pen 0) |
Total | 169/6 (19.5 Overs, RR: 8.52) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nuwan Thushara | 4 | 0 | 42 | 1 | 10.50 | |
Dushmantha Chameera | 4 | 0 | 25 | 0 | 6.25 | |
Dunith Wellalage | 4 | 0 | 36 | 0 | 9.00 | |
Wanindu Hasaranga | 4 | 0 | 22 | 2 | 5.50 | |
Dasun Shanaka | 2.5 | 0 | 21 | 2 | 8.40 | |
Kamindu Mendis | 1 | 0 | 16 | 0 | 16.00 |