இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான, இரண்டு போட்டிகள் கொண்ட டி20 சர்வதேசப் போட்டித் தொடரில், கொழும்பு ஆர் பிரேம்தாஸ மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா, தொடரை 2-0 என்ற ரீதியில் கைப்பற்றியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கட்டுகளை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில், தனஞ்சய டி சில்வா 62(50) ஓட்டங்களைப் பெற்றார். அவுஸ்திரேலிய அணி சார்பகப் பந்துவீச்சில், ஜேம்ஸ் போக்னர், அடம் ஸாம்பா ஆகியோர் தலா மூன்று விக்கட்டுகளையும் ஜோன் ஹேஸ்டிங்ஸ் இரண்டு விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.
Photo Album – Sri Lanka vs Australia 2nd T20I
129 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 17.5 ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அவுஸ்திரேலிய அணி சார்பில் துடுப்பாட்டத்தில், கிளென் மக்ஸ்வெல் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 66(29) ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணியின் பந்துவீச்சில், சச்சித் பத்திரண, தனது இறுதி சர்வதேசப் போட்டியில் விளையாடிய திலகரத்ன டில்ஷான் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளைக் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் கிளென் மக்ஸ்வெல் தெரிவானார்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை – 128/9 (20)
தனஞ்சய டி சில்வா 62, குசல் பெரேரா 22
எடம் சம்பா 16/3, ஜேம்ஸ் போல்க்னர் 19/3, ஜோன் ஹேஸ்டிங்ஸ் 23/2
அவுஸ்ரேலியா – 130/6 (17.5)
க்ளென் மெக்ஸ்வெல் 66, டேவிட் வோர்னர் 25, மெத்திவ் வடே 14
சச்சித் பதிரன 23/2, திலகரத்ன டில்ஷான் 8/2
அவுஸ்திரேலிய அணி 4 விக்கட்டுகளால் வெற்றி