Home Tamil தென்னாபிரிக்காவினை வீழ்த்திய இலங்கை இளையோர் அணி

தென்னாபிரிக்காவினை வீழ்த்திய இலங்கை இளையோர் அணி

U19 Cricket World Cup 2026

3
Sri Lanka U19 vs South Africa U19

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் சிக்ஸ் போட்டியில் இலங்கை இளையோர் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தியிருக்கின்றது.

>>தசுன் ஷானக தலைமையில் பலமான இலங்கை T20 குழாம் அறிவிப்பு<<

சுப்பர் சிக்ஸ் சுற்றின் குழு 1 அணிகளான ஆப்காகிஸ்தான் – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான போட்டி ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் வியாழன் (28) ஆரம்பமாகியது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க தலைவர் மொஹமட் பல்புலியா, முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார். பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாட்டத்தினை தொடங்கிய தென்னாபிரிக்க அணி, ஜோரிக் வான் ஸ்ச்செல்விக் மற்றும் அட்னான் லாகடியேன் ஆகியோரது துடுப்பாட்டத்தோடு, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 261 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க அணியின் சார்பில் ஜோரிக் 13 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 116 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம் அட்னான் 46 ஓட்டங்கள் பெற்றார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் விக்னேஸ்வரன் ஆகாஷ் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்க்க கவிஜ கமகே 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பின்னர் 262 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளம் வீரர்கள் 46 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 265 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றியிலக்கினை அடைந்தனர்.

>>மே.இ.தீவுகள் செல்லும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி<<

இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்த விரான் சாமுதித 94 பந்துகளில் 13 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 110 ஓட்டங்கள் எடுக்க, செனுஜ வெக்குனகொட 48 ஓட்டங்கள் பெற்றுக் கொண்டார்.

தென்னாபிரிக்க இளம் அணியின் பந்துவீச்சில் கோர்னே போத்தா  மற்றும் மிக்கேல் க்ரூயிஸ்கெம்ப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றிய போதும் அது வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாக விரான் சாமுதித்த தெரிவானார்.

இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு      

இப்போட்டியில் வெற்றி பெற்று இலங்கை குழு 1 இல் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ள போதும், இலங்கை அரையிறுதிக்கு தெரிவாக குழு 1 அணிகளான அயர்லாந்து – ஆப்கான் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற வேண்டும்.

Result
South Africa U19
261/7 (50)
Sri Lanka U19
265/5 (46)
Batsmen R B 4s 6s SR
Jorich Van Schalkwyk c Senuja Wekunagoda b Vigneshwaran Akash 116 130 6 1 89.23
Adnaan Lagadien b Vigneshwaran Akash 46 57 6 1 80.70
Muhammed Bulbulia b Vigneshwaran Akash 9 10 1 0 90.00
Jason Rowles c Dimantha Mahavithana b Chamika Heenatigala 5 9 0 0 55.56
Bandile Mbatha b Kavija Gamage 12 26 0 0 46.15
Paul James not out 37 36 0 0 102.78
Phahlamohlaka b Vigneshwaran Akash 1 8 0 0 12.50
Corne Botha c & b Kavija Gamage 8 10 0 0 80.00
Michael Kruiskamp not out 21 15 0 0 140.00
Extras 6 (b 1 , lb 1 , nb 1, w 3, pen 0)
Total 261/7 (50 Overs, RR: 5.22)
Bowling O M R W Econ
Viran Chamuditha 10 2 43 0 4.30
Sethmika Seneviratne 3 0 30 0 10.00
Rasith Nimsara 8 1 50 6.25
Kavija Gamage 9 0 61 2 6.78
Chamika Heenatigala 10 0 29 1 2.90
Vigneshwaran Akash 10 1 46 4 4.60

Batsmen R B 4s 6s SR
Viran Chamuditha c Phahlamohlaka b Corne Botha 110 94 0 0 117.02
Dimantha Mahavithana c Adnaan Lagadien b Michael Kruiskamp 4 13 0 0 30.77
Senuja Wekunagoda b Corne Botha 48 63 0 0 76.19
Vimath Dinsara c Phahlamohlaka b Paul James 32 38 0 0 84.21
Kavija Gamage c Phahlamohlaka b Michael Kruiskamp 13 18 0 0 72.22
Chamika Heenatigala not out 20 33 0 0 60.61
Dulnith Sigera not out 15 18 0 0 83.33
Extras 23 (b 0 , lb 12 , nb 1, w 10, pen 0)
Total 265/5 (46 Overs, RR: 5.76)
Bowling O M R W Econ
JJ Basson 7 0 36 0 5.14
Michael Kruiskamp 10 0 59 2 5.90
Corne Botha 8 1 37 2 4.62
Enathi Kitshini 7 0 25 0 3.57
Jorich Van Schalkwyk 3 0 22 0 7.33
Jason Rowles 3 0 20 0 6.67
Bandile Mbatha 6 0 39 0 6.50
Paul James 2 0 15 1 7.50

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<