மேற்கிந்திய தீவுகள் செல்லும் இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

104
Sri Lanka U19 squad

மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று அங்கே 7 போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் விளையாடவிருக்கும், இலங்கை 19 வயதின் கீழ் ஆடவர் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

>>தென்னாபிரிக்க வீரர் முறையற்றவிதத்தில் பந்துவீசுவதாக குற்றச்சாட்டு<<

இம்மாதம் 30ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள்இலங்கை இளம் கிரிக்கெட் அணிகள் இடையிலான இளையோர் ஒருநாள் தொடர் மேற்கிந்திய தீவுகளின் கூலிட்ஜ் கிரிக்கெட் அரங்கில் ஆரம்பமாகுகின்றது. இந்த நிலையில் இந்த தொடரில் பங்கெடுக்கும் 16 பேர் அடங்கிய இலங்கை கிரிக்கெட் குழாத்தினை, இலங்கை கனிஷ்ட தேர்வாளர்கள் குழாம் வெளியிட்டுள்ளது. 

கொழும்பு ரோயல் கல்லூரியினைச் சேர்ந்த விமத் டின்சார இலங்கை 19 வயதின் கீழ் குழாத்தின் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். அதேநேரம் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுளன், யாழ். ஹார்ட்லி கல்லூரி சுழல்பந்துவீச்சாளர் விக்னேஸ்வரன் ஆக்காஸ் ஆகிய வீரர்களுக்கும் இலங்கை குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது 

அதேநேரம் தெரிவு செய்யப்பட்ட இலங்கை குழாம் இம்மாதம் 24ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் பயணமாகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை U19 குழாம் 

விமத் டின்சார (தலைவர்), டிமன்த மஹாவிதான, புலிஷ திலகரட்ன, செனுஜ வெக்குனகொட, ஆதம் ஹில்மி, கவிஜ கமகே, விரான் சாமுதித, ஜேசன் பெர்னாண்டோ, சாமிக ஹீனட்டிகல, ரமிரு பெரேரா, செத்மிக செனவிரத்ன, குகதாஸ் மாதுளன், சஞ்சுல நின்டுவர, ரசித் நிம்சார, விக்னேஸ்வரன் ஆகாஷ், தருஷ நவோத்ய  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<