தேசிய மட்ட பளுதூக்களில் வேம்படி மகளிருக்கு இரண்டு பதக்கங்கள்

173

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளின் தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகளில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என இரண்டு பதக்கங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

கடந்த வாரம் திருகோணமலை அக்ரபோதி கல்லூரியில் இடம்பெற்ற பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில், பதினேழு வயதின் கீழ் 58 கிலோ கிராம் நிறைப் பிரிவில் பங்கு கொண்ட வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி பிரதாபன் நிலோஜினி தங்கப் பதக்கம் வென்றார்

தேசிய விளையாட்டு விழா பளுதூக்கலில் வடக்கு மாணவி ஆஷிகா தேசிய சாதனை

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து

இவர், ஸ்னெச் முறையில் 50 கிலோ கிராம் எடையையும், க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 60 கிலோ கிராம் எடையையும் தூக்கி மொத்தமாக 110 கிலோ எடைப் பதிவுடன் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

நிலோஜினி, இதற்கு முன்னரும் 2016ஆம் மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். எனவே, இம்முறை வெற்றியுடன் அவர் தொடர்ந்து 3 முறை தங்கப் பதக்கம் வென்று ஹெட்ரிக் சாதனைப் பதிவையும் மேற்கொண்டுள்ளார்

இதேவேளை, இவர் 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் அண்மையில் நிறைவுற்ற பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியின் 58 கிலோ கிராம் எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதன்போது, அவர் ஸ்னெச் முறையில் 37 கிலோ கிராம் எடையையும், க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 63 கிலோ கிராம் எடையையும் தூக்கி மொத்தமாக 110 கிலோ எடையைப் பதிவு செய்தார்.  

அதேபோன்று, கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற தேசிய கனிஷ்ட விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நிலோஜினி 2017ஆம் அண்டு இடம்பெற்ற குறித்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

 

Ravikumar Kawshiya – Jaffna Meesakai Tamil Maha vid.

Uploaded by ThePapare.com on 2018-04-28.

இதேவேளை, வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் மற்றொரு மாணவியான ராஜசேகரன் கேதாரணியும் இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளின் தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் முதல் முறை கலந்துகொண்டு மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.  

நிலோஜினி பங்கு கொண்ட அதே பிரிவில் போட்டியிட்ட இவர், ஸ்னெச் முறையில் 35 கிலோ கிராம் எடையையும், க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 50 கிலோ கிராம் எடையையும் தூக்கி மொத்தமாக 85 கிலோ எடைப் பதிவுடன் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். 

தொடர்ந்து பல வருடங்களாக பளுதூக்கல் போட்டியில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள் இப்போட்டியில் பதக்கங்களைப் பெற்று வருகின்றனர். 2014ஆம் ஆண்டு டினேயா பயஸ் என்னும் மாணவி பொதுநலவாய விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்தமையும் இங்கு நினைவுகூறத்தக்கது. 

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க

Anitha Jagathiswaran – Pole Vault National record Holder (3.55m)

Uploaded by ThePapare.com on 2018-04-24.