இலங்கை T20I தொடருக்கான ஜிம்பாப்வே குழாம் வெளியீடு

Sri Lanka tour of Zimbabwe 2025

11
Sri Lanka tour of Zimbabwe 2025

ஜிம்பாப்வே – இலங்கை அணிகள் பங்கெடுக்கும் ஒருநாள் தொடரினை அடுத்து இரு அணிகளுக்குமான மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடர் நாளை (03) ஹராரேவில் ஆரம்பமாகும் நிலையில், இந்த தொடரில் பங்கெடுக்கும் 16 பேர் அடங்கிய ஜிம்பாப்வே குழாம் வெளியிடப்பட்டுள்ளது.

>>மிச்சல் ஸ்டார்க் T20I கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

அந்தவகையில் ஷோன் வில்லியம்ஸ், ப்ரென்டன் டெய்லர் போன்ற முன்னணி வீரர்களின் வருகையுடன் அறிவிக்கப்பட்டுள்ள ஜிம்பாப்வே T20I குழாத்தில் ப்ரட் எவான்ஸ், தடிவானஷே மருமானி ஆகிய வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே அணியில் மீண்டிருக்கும் ஷோன் வில்லியம்ஸ் இறுதியாக பங்களாதேஷிற்கு எதிராக 2024ஆம் ஆண்டே T20I போட்டியில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை ஜிம்பாப்வே நியூசிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுடன் பங்கேற்றிருந்த முக்கோண T20I தொடரில் விளையாடிய வீரர்களான நிவ்மன் யம்ஹுரி, வெஸ்லி மதவ்வாரே, வின்சேன்ட் மசிகேசா மற்றும் தபட்ஸ்வா சிகா ஆகிய வீரர்களுக்கு இலங்கை T20I தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஜிம்பாப்வே குழாம்

சிக்கந்தர் ரஷா (தலைவர்), ப்ரையன் பென்னேட், ரயான் பர்ல், ப்ரட் எவான்ஸ், ட்ரவர் க்வான்டு, க்ளைவ் மதான்டே, டினோடென்டா மாபோசா, தடிவானஷே மருமானி, வெலிங்டன் மசகட்ஷா, டோனி முனியோங்கா, தஷிங்கா முசேகிவா, ப்ளெஸ்ஸிங் முசாரபானி, டியன் மேயர்ஸ், ரிச்சட் ன்கராவா, ப்ரென்டன் டெய்லர், ஷோன் வில்லியம்ஸ்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<