இலங்கை கிரிக்கெட் அணியானது எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் சிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு ஒருநாள் மற்றும் 3 T20I போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
குறித்த இந்த தொடருக்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
>>இலங்கைப் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தோடு முதல்நாள் நிறைவு<<
இரண்டு ஒருநாள் போட்டிகளுடன் ஆகஸ்ட் 29ஆம் திகதி தொடர் ஆரம்பமாகவுள்ளதுடன், T20I தொடர் செப்டம்பர் 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
தொடரின் போட்டிகள் அனைத்தும் சிம்பாப்வேயின் ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
- முதல் ஒருநாள் – ஆகஸ்ட் 29 (ஹராரே)
- இரண்டாவது ஒருநாள் – ஆகஸ்ட் 31 (ஹராரே)
- முதல் T20I – செப்டம்பர் 3 (ஹராரே)
- இரண்டாவது T20I – செப்டம்பர் 5 (ஹராரே)
- மூன்றாவது T20I – செப்டம்பர் 7 (ஹராரே)
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















