சுற்றுலா இலங்கை – ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியானது 5 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, இரு போட்டிகள் கொண்ட தொடரினையும் 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.
>> ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி நேரங்களில் மாற்றம்
ஜிம்பாப்வேயின் ஹராரேவில் ஒழுங்கு செய்யப்பட்ட இரண்டாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கைத் தலைவர் சரித் அசலன்க முதலில் துடுப்பாட்டத்தினை எதிரணிக்கு வழங்கினார்.
இப்போட்டிக்கான இலங்கை குழாம் உபாதைக்குள்ளான நிஷான் மதுஷ்கவிற்குப் பதிலாக நுவனிது பெர்னாண்டோவினை இலங்கை குழாத்தில் உள்வாங்கியிருந்தது.
பின்னர் நாணய சுழற்சிக்கு ஏற்ப துடுப்பாட்டத்தினை தொடங்கிய ஜிம்பாப்வே மிகச் சிறந்த ஆரம்பத்தினைப் பெற்றுக் கொண்டது. அவ்வணியின் ஆரம்ப வீரர்களில் ஒருவரான பென் கர்ரன் தொடரில் அடுத்தடுத்த அரைச்சதங்களைப் பதிவு செய்தார். முதல் போட்டியில் 70 ஓட்டங்களைப் பெற்ற அவர் இம்முறை 79 ஓட்டங்களை எடுத்துக் கொண்டார். அத்துடன் பென் கர்ரனிற்கு இது இரண்டாவது அரைச்சதமாகவும் மாறியது.
>> ஜிம்பாப்வே செல்லும் இலங்கை T20I குழாம் அறிவிப்பு
பின்னர் ஜிம்பாப்வே அணிக்காக மத்திய வரிசையில் வந்த சிக்கந்தர் ரஷா பெறுமதிமிக்க அரைச்சதம் ஒன்றை பெற்றுக் கொடுத்த நிலையில், அவ்வணியானது 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்கள் எடுத்துக் கொண்டது.
ஜிம்பாப்வே அணிக்காக இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்த ரஷா 55 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் துஷ்மன்த சமீர 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 278 ஓட்டங்களை அடைய பதிலுக்குத் துடுப்பாடிய இலங்கை அணிக்கு பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலன்க ஆகியோர் துடுப்பாட்டத்தில் கைகொடுத்தனர். இதன் காரணமாக இலங்கை வீரர்கள் போட்டியின் வெற்றி இலக்கினை 49.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 278 ஓட்டங்களுடன் அடைந்தனர்.
இலங்கைத் தரப்பின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் பெதும் நிஸ்ஸங்க தன்னுடைய 7ஆவது சதத்தோடு 16 பௌண்டரிகள் அடங்கலாக 122 ஓட்டங்கள் பெற்றார்.
மறுமுனையில் இலங்கை அணியின் தலைவர் சரித் அசலன்க 61 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சில் ரிச்சர்ட் ன்கராவா மற்றும் ப்ரட் எவான்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் பெதும் நிஸ்ஸங்க தெரிவாகினார்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Brian Bennett | b Dushmantha Chameera | 21 | 29 | 2 | 0 | 72.41 |
Ben Curran | c Pavan Rathnayake b Asitha Fernando | 79 | 95 | 9 | 0 | 83.16 |
Brendan Taylor | c Dushmantha Chameera b Janith Liyanage | 20 | 37 | 0 | 0 | 54.05 |
Sean Williams | c Pavan Rathnayake b Asitha Fernando | 20 | 28 | 1 | 1 | 71.43 |
Sikandar Raza | not out | 59 | 55 | 5 | 1 | 107.27 |
Tony Munyonga | b Dilshan Madusanka | 10 | 13 | 1 | 0 | 76.92 |
Clive Madande | b Dushmantha Chameera | 36 | 36 | 4 | 0 | 100.00 |
Brad Evans | c Pavan Rathnayake b Dushmantha Chameera | 8 | 5 | 1 | 0 | 160.00 |
Richard Ngarava | not out | 2 | 2 | 0 | 0 | 100.00 |
Extras | 22 (b 0 , lb 3 , nb 0, w 19, pen 0) |
Total | 277/7 (50 Overs, RR: 5.54) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 9 | 0 | 67 | 2 | 7.44 | |
Dilshan Madusanka | 10 | 0 | 57 | 1 | 5.70 | |
Dushmantha Chameera | 10 | 0 | 52 | 3 | 5.20 | |
Maheesh Theekshana | 10 | 1 | 45 | 0 | 4.50 | |
Charith Asalanka | 4 | 0 | 17 | 0 | 4.25 | |
Janith Liyanage | 7 | 0 | 36 | 1 | 5.14 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Wesly Madhevere b Richard Ngarava | 122 | 136 | 16 | 0 | 89.71 |
Nuwanidu Fernando | b Brad Evans | 14 | 27 | 2 | 0 | 51.85 |
Kusal Mendis | c Ben Curran b Brad Evans | 5 | 10 | 0 | 0 | 50.00 |
Sadeera Samarawickrama | c Sikandar Raza b Ernest Masuku | 31 | 46 | 2 | 0 | 67.39 |
Charith Asalanka | c Brian Bennett b Richard Ngarava | 71 | 61 | 7 | 0 | 116.39 |
Janith Liyanage | not out | 19 | 16 | 2 | 0 | 118.75 |
Kamindu Mendis | not out | 5 | 2 | 1 | 0 | 250.00 |
Extras | 11 (b 0 , lb 4 , nb 1, w 6, pen 0) |
Total | 278/5 (49.3 Overs, RR: 5.62) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Richard Ngarava | 9 | 0 | 53 | 1 | 5.89 | |
Blessing Muzarabani | 8.3 | 0 | 54 | 0 | 6.51 | |
Brad Evans | 10 | 0 | 54 | 2 | 5.40 | |
Prince Masvaure | 5 | 0 | 32 | 1 | 6.40 | |
Sikandar Raza | 9 | 0 | 46 | 0 | 5.11 | |
Sean Williams | 8 | 0 | 35 | 0 | 4.38 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<