உலகக் கிண்ண தோல்வியின் பின் கால்பந்தை பிடிக்காத நெய்மார்

809
Image Courtesy - AFP

நடைபெற்று முடிந்த பிஃபா உலகக் கிண்ண காலிறுதியில் பிரேசில் அணி பெல்ஜியத்திடம் தோற்ற பின்னர் தாம் கால்பந்தை பிடிக்கவில்லை என்றும் எஞ்சிய எந்த ஒரு உலகக் கிண்ண போட்டியையும் பார்க்கவில்லை என்றும் பிரேசில் நட்சத்திரம் நெய்மார் குறிப்பிட்டுள்ளார்.

நான் கால்பந்து போட்டியை பார்க்கவோ அல்லது கால்பந்து ஆடவோ விரும்பவில்லைஎன்று AFP செய்தி நிறுவனத்திற்கு சனிக்கிழமை (21) அளித்த பிரத்தியேக நேர்காணலில் நெய்மார் குறிப்பிட்டார்.   

பிரேசிலை வீழ்த்திய பெல்ஜியம் அரையிறுதியில் பிரான்ஸுடன் பலப்பரீட்சை

திறமையான ஆட்டத்தை வெளிக்காட்டிய…

நெய்மாரின் பெயரில் நடைபெறும் அணிக்கு ஐவர் கொண்ட கால்பந்து தொடர் ஒன்றில் கலந்துகொண்டபோதே பரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணியின் முன்கள வீரர் இதனைத் தெரிவித்துள்ளார்.  

கையில்லாத டீசேர்ட் அணிந்துகொண்டு தனது ஆறு வயது மகன் டேவிட் லுக்காவுடன் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த நெய்மார் சற்று ஓய்வான மனநிலையுடனேயே இருந்தார்.  

ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் அணிக்கு நெய்மார் மாறுவது குறித்து வெளியாகும் வதந்திகள் பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது,அவை அனைத்துமே செய்தி ஊடகங்களின் ஊகங்கள் மாத்திரமேஎன்றார்.

உண்மையில் நான் புதிய பருவம் ஒன்றை எதிர்பார்த்துள்ளேன்என்று அவர் குறிப்பிட்டார். பார்சிலோனாவில் இருந்து உலக சாதனை தொகைக்கு விலைபோன நெய்மார் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக இரண்டாவது பருவத்தில் ஆடுவது குறித்தே இவ்வாறு சுட்டிக்காட்டி இருந்தார்.

நாம் கால்பந்து ஜாம்பவானுடன் (இத்தாலி கோல் காப்பாளர் கியன்லுகி பப்போன்) ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். அவர் தனது அனுபவத்தை தந்து எதிர்வரும் பருவத்தில் சிறப்பாக உதவுவார்என்று நெய்மார் நம்பிக்கை தெரிவித்தார்.  

உலகக் கிண்ண போட்டிகளில் மைதானத்தில் அடிக்கடி கீழே விழுந்து செய்கை புரிந்த நெய்மார், சர்வதேச அளவில் விமர்சனத்திற்கு முகம்கொடுத்தார். என்றாலும் தாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டி இருந்ததாக அவர் நியாயம் கூறியுள்ளார்.

நான் உதை வாங்குவதற்காக உலகக் கிண்ணத்திற்கு செல்லவில்லை. என்னால் ஒரே நேரத்தில் நடுவராகவும் வீரராகவும் இருக்க முடியாது. ஆனால், நேரம் ஏற்பட்டாள் நான் முயற்சிப்பேன்என்று நெய்மார் கூறினார்.

நான் துயரத்துடன் இருந்தேன், கவலையோடு இருந்தேன், ஆனால் கவலைகள் போய்விட்டனஎன்று நெய்மார் குறிப்பிட்டார்.எனது மகன், குடும்பத்தினர், நண்பர்கள் நான் மைதானத்தில் மனச்சோர்வோடு இருப்பதை காண விரும்பவில்லை என்றும் கூறினார்.    

இருப்பினும், இனி கால்பந்தாட்டங்களில் கலந்துகொள்ள மாட்டேன் என்று கூறும் அளவுக்குப் போகவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<