த்ரில் வெற்றியுடன் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை வெற்றி

Sri Lanka tour of Zimbabwe 2025

1

டில்சான் மதுசங்கவின் அபார ஹெட்ரிக், ஜனித் லியனகே – கமிந்து மெண்டிஸ் ஆகியோரது அசத்தல் இணைப்பாட்டம் என்பவற்றின் துணையுடன் இலங்கை ஜிம்பாப்வேயிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 07 ஓட்டங்களால் த்ரில் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது. 

ஜிம்பாப்வே செல்லும் இலங்கை T20I குழாம் அறிவிப்பு

மேலும் இந்த வெற்றி இந்த ஒருநாள் தொடரில் இலங்கை 1-0 என முன்னிலை பெறவும் காரணமாகியிருக்கின்றது. ஹராரேவில் முன்னதாக ஆரம்பித்த சுற்றுலா இலங்கைஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே அணியின் தலைவர் ஷோன் வில்லியம்ஸ் முதலில், இலங்கை அணியினை துடுப்பாடப் பணித்தார் 

மந்த கதியில் ஆரம்பித்த இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஓட்டங்களேதுமின்றி நிஷான் மதுஷ்க முதல் விக்கெட்டானர். எனினும் பெதும் நிஸ்ஸங்ககுசல் மெண்டிஸ் ஜோடி 100 ஓட்டங்களை இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்தது 

இலங்கையின் இரண்டாம் விக்கெட்டான குசல் மெண்டிஸ் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அதன் பின்னர் பெதும் நிஸ்ஸங்க தன்னுடைய 17ஆவது அரைச்சதம் விளாசி 12 பௌண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்கள் பெற்று ஓய்வறை சென்றார் 

குறுகிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்த இலங்கை அணியானது ஒரு கட்டத்தில் 161 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிதானம் கலந்த அதிரடியோடு இலங்கைத் தரப்பினை கமிந்து மெண்டிஸ்ஜனித் லியனகே ஆகிய இருவரும் பலப்படுத்தினர். இலங்கை அணியானது இறுதியில் 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 298 ஓட்டங்கள் எடுத்தது. 

ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியில் வனிந்து ஹஸரங்க

இலங்கைத் தரப்பில் ஆறாம் விக்கெட் இணைப்பாட்டமாக 137 ஓட்டங்களை ஜனித்கமிந்து ஜோடி பகிர்ந்ததோடு இதில் வெறும் 30 பந்துகளில் அரைச்சதம் பெற்ற கமிந்து மெண்டிஸ் தன்னுடைய நான்காவது ஒருநாள் அரைச்சதத்தோடு 4 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 57 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்த ஜனித் லியனகே அவரின் ஆறாவது ஒருநாள் அரைச்சதத்தோடு 47 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 70 ஓட்டங்கள் எடுத்தார் 

ஜிம்பாப்வே பந்துவீச்சில் ன்கராவா 34 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களை எடுத்திருந்தார். தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்கான 299 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஜிம்பாப்வே அணியானது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய போதும் அவ்வணிக்கு பென் கர்ரன் மற்றும் ஷோன் வில்லியம்ஸ் ஆகியோர் சிறந்த துவக்கத்தினை வழங்கினர். இந்த வீரர்களில் பென் கர்ரன் 70 ஓட்டங்கள் எடுக்க, ஷோன் வில்லியம்ஸ் 57 ஓட்டங்கள் பெற்றார் 

இந்த வீரர்களின் பின்னர் சிக்கந்தர் ரஷா மற்றும் டொனி முனியோங்கா ஆகிய இருவரும் நிதானமாக ஆடி வெற்றி இலக்கினை நெருங்கிச் சென்றனர். இரு வீரர்களும் 128 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர போட்டியின் இறுதி ஓவரில் 10 ஓட்டங்கள் ஜிம்பாப்வே அணிக்கு தேவைப்பட்டது 

எனினும் போட்டியின் இறுதி ஓவரினை வீசிய டில்சான் மதுசங்க இறுதி ஓவரின் முதல் மூன்று பந்துகளிலும் விக்கெட்டுக்களை வீழ்த்தி ஹட்ரிக் பதிவு செய்தார். இதனால் போட்டி முழுமையாக இலங்கையின் பக்கம் சாய்ந்ததோடு ஜிம்பாப்வே அணியினால் 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. 

ஜிம்பாப்வே துடுப்பாட்டத்தில் சிக்கந்தர் ரஷா 87 பந்துகளில் 8 பௌண்டரிகள் அடங்கலாக 92 ஓட்டங்கள் எடுக்க, ஆட்டமிழக்காதிருந்த டோனி முனியோங்கா 43 ஓட்டங்கள் பெற்றார் 

இலங்கை பந்துவீச்சில் டில்சான் மதுசங்க 4 விக்கெட்டுக்களையும், அசித பெர்னாண்டோ 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக டில்சான் மதுசங்க தெரிவானார் 

போட்டியின் சுருக்கம் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<